• அரசியல்
    அரசியல்Show More
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    May 29, 2026 at 6:36 pm
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    May 29, 2026 at 6:01 pm
    aadhav arjuna speech
    ஆதவ் அர்ஜுனாவின் தற்குறி பேச்சு – விவசாயிகள் கடும் கண்டனம்
    May 29, 2026 at 1:31 pm
    ammk ttv dinakaran
    சொல்லப்படும் தகவல் உண்மையென்றால் தவெக அரசு எதற்கு? டிடிவி தினகரன் விளாசல்
    May 29, 2026 at 12:22 pm
    modi meet vijay
    7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
    May 28, 2026 at 4:52 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    2026-05-29
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    2026-05-29
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    2026-05-29
    Iran Oil Sanctions
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
    Trump Cuba oil tariffs, US foreign policy Cuba,Online Tamil News
    உலகம்
    “கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன்” – ட்ரம்ப்
    2026-01-30
    Singapore-US- richest countries-World Atlas-Liechtenstein-Singapore-America
    உலகம்
    அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சிங்கப்பூர்…உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் இதோ !
    2025-12-30
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: ஏழை நகையின் கண்ணீர்!
Share
31°C
Chennai
scattered clouds
32° _ 31°
79%
4 km/h
Mon
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: ஏழை நகையின் கண்ணீர்!

Last updated: 2025-05-22 7:45 am
92 Views
Share
gold loan
SHARE

நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்கு அழைத்து வந்த கணவனுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னதும், பணமில்லையே என்று கலங்காமல், அந்தக் கணவன் தன் கழுத்தில் கட்டிய தாலிக்கொடியை உடனே கழற்றி, அடமானம் வைத்து அந்தப் பணத்தில் தன் கணவனையும் தாலியையும் மீட்கும் பெண்கள் இந்தியாவெங்கும் உண்டு. தங்க நகை என்பது பெண்களுக்கு அலங்காரமாக மட்டும் இருந்த காலம் மாறி, அது அவசர அவசியத்திற்கான சொத்தாக மாறிப் பல வருடங்களாகிறது.

பள்ளிக்கூடக் கட்டணம், இருசக்கர வாகனம் வாங்குவதற்கான முன்பணம் எனப் பல வழிகளிலும் தங்க நகைகள் கைக் கொடுத்து வருகின்றன. ஏழை-நடுத்தரக் குடும்பத்தினர் தங்கள் சுயமரியாதையை அடமானம் வைக்காதபடி, தங்க நகை அடமானக் கடன் அவர்களைக் காப்பாற்றி வருகிறது. இந்திய ஏழைகள் சுயமரியாதையோடு இருக்கலாமா? அதுவும், சனாதன-வருணாசிரமத்துக்காக வரிந்து கட்டும் கட்சியும் அதன் பிரதமரும் ஆளும் நாட்டில் ஏழைகள், சாதிரீதியாக ஒடுக்கப்படுபவர்கள் இவர்களெல்லாம் தங்க நகையை நம்பி சுயமரியாதையோடு வாழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியை விட வேகமாக சிந்தித்து மக்களை வதைப்பதில் முன்னணியில் நிற்பவர். வெங்காயம்-பூண்டு விலை உயர்வு பற்றிக் கேட்டால், அதையெல்லாம் நான் சாப்பிடுவதில்லை என்று பதில் சொன்ன பிரகஸ்பதி. தங்க நகைக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளால் ஏழை-நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேட்டால், நான் நகையை அடமானம் வைப்பதில்லை என்று சொன்னாலும் சொல்வார்.

புதிய கட்டுப்பாடுகளின்படி, தங்க நகையை ஒருவர் ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்திருந்தால், முழுப் பணத்தையும் கட்டிவிட்டு, மறுநாள்தான் மறு அடமானம் வைக்க முடியும். முன்பிருந்த விதியின்படி, அதுவரையிலான வட்டியைக் கட்டி மறு அடமானம் வைக்க முடியும் என்பதால் ஏழை-நடுத்தர மக்களுக்கு தங்க நகை என்பது ஒரு முதலீடாகக் கைக்கொடுத்து வந்தது. நகையில் உள்ள தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது 75 சதவீதமாக புதிய கட்டுப்பாட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், குறைந்த அளவிலான தேவைக்கும் கூடுதல் நகைகளை அடமானம் வைக்க வேண்டியிருக்கும்.

இனி அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிமை ஆதாரம் தரப்பட வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்க நகை வாங்கியதற்கான பில் இருக்க வேண்டும். இந்தியக் குடும்பங்களின் மரபுவழி நகைகள் மூன்று நான்கு தலைமுறைகளுக்கு மேல் சீராக வழங்கப்படுகின்றன. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் மொய்யாக தங்கத்தாலான அணிகலன்களையும் பொருட்களையும் தருபவர்களும் உண்டு. இவற்றுக்கெல்லாம் எங்கிருந்து பில் வாங்க முடியும்? பரம்பரையாக அணிந்து கொள்ளும் நகை என்பதாலேயே அதனை விற்காமலும், மாற்று நகையாக செய்யாமலும், அப்படியே அடமானம் வைத்து, பணம் கிடைத்ததும் மீட்பது என்பது ஏழை-நடுத்தர குடும்பத்தினரின் வழக்கம். இனி, அவர்கள் அப்படி அடமானம் வைக்க முடியாது. ஏழையின் நகையும் கண்ணீர் வடிக்கும் நிலைக்குள்ளாகி விட்டது.

பழைய நகை-பாரம்பரிய நகையாக இருந்தால் அதனை உருக்க வேண்டும். அதன்பிறகு புதிய நகை செய்ய வேண்டும். அதற்கான செய்கூலி-சேதாரம் செலவை ஏற்கவேண்டும். இந்தக் கூடுதல் செலவுடன், பழைய நகை தற்போது புதிய டிசைன் நகையாகிவிட்டதால் அதற்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். இத்தனையும் செய்து, பில்லுடன் சென்றால்தான் வங்கிகளில் அடமானம் வைக்க முடியும்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்த அதிமேதாவிகள், தங்கத்தின் புழக்கத்தை கணக்கிற்கு கொண்டு வருவதாக நினைத்து, அப்போது போலவே இப்போதும் ஏழை-நடுத்தர மக்களை மனசாட்சியே இல்லாமல் துன்புறுத்தும் செயலை மேற்கொண்டிருக்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணக் கொள்ளையை ஒழிக்கவே நீட் தேர்வை அறிமுகப்படுத்துகிறோம் என்று சொல்லி கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிப்பதற்கு வழி வகுத்தது மத்திய அரசு. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர குடும்பத்து மாணவமணிகள்தான். கொழுத்த லாபம் அடைந்த கோச்சிங் சென்டர்கள் பலவும் மத்திய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுடையதாக இருந்தது.

வங்கிகளில் நகை அடமானம் வைக்க ரிசர்வ் வங்கி வாயிலாக விதிக்கப்பட்டிருக்கும் புதிய கெடுபிடிகளால், ஏழை-நடுத்தர மக்கள் தங்கள் அவசர பணத் தேவைக்கு வட்டிக்கடைக்காரர்களிடம் செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் குஜராத்தைச் சேர்ந்த மார்வாடிகளாக இருப்பார்கள். கூட்டிக் கழிச்சிப் பாருங்க. வட்டியோடு கணக்கு சரியா இருக்கும்.

TAGGED:gold loanRBI
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article misinformation-1 தலையங்கம்: நாள்தோறும் பரவும் வதந்திகள்
Next Article tasmac தலையங்கம்: டாஸ்மாக்கும் அரசுகளும்

உலகம்

Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

c vijayabaskar
இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
May 29, 2026 at 6:36 pm
poongundran sankaralingam
தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
May 29, 2026 at 6:01 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?