*தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கிராமத்தில் பிறந்தார்
*பெரியகுளம் விக்டோரியா அரசு நினைவுப்பள்ளியில் பள்ளிப்படிப்பு
*மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பி.யூ.சி. படிப்பு
*உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் பி.ஏ. படிப்பு
*பி.ஏ. பட்டம் பெற்றும் பெரியகுளத்தில் டீ கடை நடத்தி வந்தார்
*எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஓபிஎஸ் 1972ல் அதிமுக தொடங்கப்பட்டபோது அதில் இணைந்தார்

முதல் பதவி:
*1977ல் பெரியகுளம் நகர 18வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதி – இதுவே ஓபிஎஸ்சின் முதல் பதவி
*1984ல் 33 வயதில் பெரியகுளம் எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர்
*1987ல் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் ஜானகி அணியில் இணைந்தார்
*1991ல் பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி இயக்குநர்
*அதிமுக ஒன்றிணைந்தபோது 1993ல் அதிமுக பெரியகுளம் நகர கழகச் செயலாளர்
*1996ல் உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகரசபை தலைவர்

முதலமைச்சர்:
*2001ல் பெரியகுளம் எம்.எல்.ஏ. – முதல்முறை எம்.எல்.ஏ. ஆனதுமே வருவாய் துறை அமைச்சர், முதலமைச்சர் ஆனார்
*2001ல் டான்சி வழக்கில் ஜெ., சிறை சென்றதால் முதல்வரானார் – 21.9.2001 முதல் 1.3.2002 வரை முதலமைச்சராக இருந்தார்
2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர்
2006ல் பெரியகுளத்தில் வென்று எதிர்க்கட்சி தலைவர் – துணைத்தலைவர் ஆனார்
2011ல் போடி தொகுதியில் வென்று நிதி அமைச்சர் – அவை முன்னவர்
2ஆவது முறை முதலமைச்சர்:
*2014ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறை சென்றபோது முதல்வரானார்
*29.9.2014 முதல் 22.5.2015 வரை 2வது முறை முதலமைச்சர் ஆனார்
*2016ல் போடி தொகுதியில் மீண்டும் வென்று நிதி அமைச்சரானார்

3ஆவது முறை முதலைமைச்சர்:
*ஜெ., மறைவுக்கு பின்னர் 2017ல் 3ஆவது முறையாக முதல்வரானார்
*முதல்வர் பதவியை சசிகலா பறித்ததால் 2017ல் தர்மயுத்தம்
*இபிஎஸ் உடன் சமரசம் ஏற்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரானார்
*2021ல் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்
*2023ல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தொடங்கி எடப்பாடிக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தினார்
*2024ல் மக்களவை தேர்தலில் சுயேட்சையாக ராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்தில் நின்று தோல்வியுற்றார்

*2026ல் அதிமுகவில் தன்னை சேர்த்துக்கொள்ளச் சொல்லி வெளிப்படையாக கோரிக்கை வைத்தார். எடப்பாடி பழனிசாமி இவரது கோரிக்கையை நிராகரித்தார்
*சட்டப்பேரவை நிறைவுநாளில் திமுக அரசை பாராட்டி பேசி பரபரப்பை ஏற்படுத்தினர் ஓ.பன்னீர்செல்வமும் ஐயப்பனும். முன்னதாக முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்ட போதும், முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்றும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஓபிஎஸ்
*27.2.2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்



