இன்றைக்கு நிதிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கு அதே கதி நாளை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் ஜேடிஏ இணைந்து போட்டியிட்டு வென்றது. இதில் பாஜகவுக்கு 89 இடங்களும் ஜேடியுவுக்கு 85 இடங்களும் கிடைத்தன. கூட்டணி தர்மத்தின் படி நிதிஷ்குமாரையே முதல்வராக்கியது பாஜக. ஆனால் சில மாதங்களிலேயே அவரை முதலமைச்சர் நாற்காலியில் இருந்து இறங்கச்சொல்லி இருக்கிறது பாஜகவின் அழுத்தம். முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் நிதிஷ்குமார்.
புதிதாக அமையவிருக்கும் என்.டி.ஏ. – ஜேடியு கூட்டணி ஆட்சியில் பாஜகவை சேர்ந்தவர் முதல்வர் நாற்காலியில் உட்கார இருக்கிறார்.

ஏன் இந்த முடிவை எடுத்தார் நிதிஷ்குமார்?
’’நிதீஷ்குமாருக்கு வழங்கப்பட்ட அணுகுமுறையை பார்த்த பிறகு, என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும்.
மோடி மற்றும் அமித்ஷா நடத்தும் இந்த கூட்டணியில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல — அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி போன்ற தலைவர்கள் அடுத்த நிறுத்தம் என்னவாக இருக்கும் என்று சிறிது பதட்டமாக இருக்கலாம்’’என்கிறார் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர்.

’’மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும் நடந்ததுதான் , பீகாரில் நிதிஷ்குமார் கட்சிக்கு நடந்ததுதான் தமிழகத்தில் அதிமுகவுக்கும் நடக்கும் என்று பீகார் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். இப்போது நடந்து விட்டது’’ என்கிறார் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ்.
இவர்கள் சொல்வதற்கு ஏற்றார் போன்றுதான், என்.டி.ஏ. கூட்டணி வென்றால் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்கிறார்கள் பாஜகவினர். அதிமுக ஆட்சி அமையும் என்று பாஜகவில் ஒருவர் கூட இதுவரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.