[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை!

T.R.Kathiravan
Last updated: 2026-03-05 5:07 pm
T.R.Kathiravan T.R.Kathiravan
cmstalin

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை அடிக்கிறது.  ஆட்சியை தக்கவைத்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் அரியணை ஏறி சாதனை படைக்க உள்ளார் ஸ்டாலின் என்கின்றன பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள்.  

‘ஸ்டாலின்தான் வாராறு விடியல் தரப்போறாரு’ என்பதில் தொடங்கிய வேகம் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..’ என்று முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் இன்னும் வேகமெடுத்தது.  நலத்திட்டங்கள், பிரச்சாரப் பயணங்கள் என்று ஒரு நாளும் ஓய்ந்ததில்லை ஸ்டாலின். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கின்றன என்று கருத்துக் கணிப்புகள் வந்தாலும் கூட மெத்தனத்தில் இருக்காமல், தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று உழைத்து வருகிறார். அடுத்தடுத்து திட்டங்களை அறிவித்தும், நிறைவேற்றியும்,  கலைஞர் சொன்னதுமாதிரி ‘’ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு , உழைப்பு’’ என்பதை மெய்ப்பித்துவிட்டார் ஸ்டாலின். இந்த உழைப்புதான் ஸ்டாலின் என்றால் வெற்றி, வெற்றி, வெற்றி என்று சொல்லக் காரணமாக அமைந்திருக்கிறது.

சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என்று  தனது தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் அடித்து ஆடியிருக்கிறார் ஸ்டாலின்.  

அந்த ஆண்டவனே திமுக பக்கம்:

திருப்பரங்குன்றத்தை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தும் அது கைகூடவில்லை.  அதனால்தான் திருப்பரங்குன்றம் இந்த முறை திமுக வசமாகும் என்கின்றன கருத்துக்கணிப்பு முடிவுகள்.  திருப்பரங்குன்றம் மட்டுமல்ல பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சாமிமலை என்று முருகன் அருள் மொத்தமும் திமுக கூட்டணிக்கே அமைந்திருக்கிறது என்கின்றன கருத்துக்கணிப்பு முடிவுகள்.

விரும்பும் பிராமண சமூகம்:

பிராமண எதிர்ப்பை சம்பாதிக்கும்படியாக எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை ஸ்டாலின்.  இது அந்த சமூக மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிராமண வாக்குகள் திமுக பக்கம் திரும்புகின்றன என்கிறது அண்மைக்கால சர்வே முடிவுகள்.

பேருதவி திட்டங்கள்:

மகளிர் விடியல் பேருந்து பயணம் என்பது ஆரம்பத்தில் பிங்க் நிற பஸ்சில்தான் செல்ல முடியும். ஆனால் இப்போது சென்னை தலைநகரத்தில் மகளிர் விடியல் பயணம் என்று பெரும்பாலான பேருந்துகள் ஓடுகின்றன.  இது வேலைக்குச் செல்லும் எளிய குடும்பத்துப் பெண்களுக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது.  வேலைக்குச் செல்ல முடியாமல் இல்லத்தரசியாக இருந்தாலும் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் பணம் வரவு ஆகி அவர்களுக்கும் புதுத்தெம்பு அளிக்கிறது  ’கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம்.

 இன்ப அதிர்ச்சிகள்:

கடந்த ஆண்டுகளில் ரொக்கமாக பொங்கல் பரிசு இல்லாத ஏமாற்றத்தை இந்த ஆண்டு பொங்கலுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த ஏமாற்றத்தை போக்கிவிட்டார் ஸ்டாலின்.  கூடுதல் மகிழ்ச்சியாக கோடைகால சிறப்புத்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார் ஸ்டாலின். 

தேர்தல் அறிவித்துவிட்டால் மகளிர் உரிமைத்தொகையை எதிர்க்கட்சியினர் முடக்கிவிடுவார்களோ? என்ற அச்சத்தில் இருந்தவர்களுக்கும்  மூன்று மாத பணத்தை ஒரே நாளில் வங்கியில் வரவு வைத்து பெரும் இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார் ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலிடம்:

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேறு எந்த மாநிலமும் அடையாத வளர்ச்சியாக 9.69% வளர்ச்சி கண்டு பொருளாதாரத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.  உ.பி, மராட்டியம், கர்நாடகம் மாநிலங்களை காட்டிலும் மின்னணு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

அரசுத்துறையிலும், தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்துவதால் தமிழகம் வேலைவாய்ப்புகளில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்,  முதலமைச்சரின் காலை உணவு போன்ற புரக்கர திட்டங்களாளும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் ஸ்டாலின்.

cm mk stalin

.தேசிய அளவிலும் அலை:

தமிழகத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் ஸ்டாலின் அலை அடித்துக் கொண்டிருக்கிறது.

 பாஜகவின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்றால் இந்தியா கூட்டணிக்கு வலிமையான தலைவர் வேண்டும்.  இதனால் இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு வலிமையான தலைவரை அறிவிக்க வேண்டும்.  அந்த வலிமையான தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.  அவரை இப்போதே அறிவிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சித்தலைவர்  உத்தவ் தாக்கரேவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் ’சாம்னா’வில் தலையங்கம் வந்தது. முன்னதாக, ‘’இந்தியா கூட்டணி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு மு.க.ஸ்டாலின் தலைமயேற்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

கம்பீரம்:

கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் எதிரிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவினைப்பெற்று கம்பீரமாக நிற்கிறார் ஸ்டாலின்.  அதனால்தான் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளை வெல்லும் என்று சொல்கின்றன கருத்துக்கணிப்பு முடிவுகள்.  ‘வெல்வோம் 200 – படைப்போம் வரலாறு’ என்று ஸ்டாலின் உறுதிமிக்க குரலில் சொல்கிறார். 

பிரம்மாண்ட கூட்டணி:

ஸ்டாலினுக்கு தமிழகமெங்கிலும் இருக்கும் இந்த செல்வாக்கை பார்த்துதான் 2026 தேர்தல் நிச்சய வெற்றி என்று தெரிந்துதான் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் எல்லாமே திமுக கூட்டணியில் இருக்கின்றன.  திமுக கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் உள்ளன.   அதிக  சீட், ஆட்சியில் பங்கு என்று தவெக   விரித்த வலையில் காங்கிரஸ் சிக்காமல் திமுக பக்கமே நிற்பதற்கு காரணம் தவெக இப்போது ஆட்சிக்கு வரப்போவதில்லை.   ஆனால்  திமுகவின் வெற்றி கண்ணுக்கு தெரிகிறது. அதனால் வெற்று ஆஃபர்களை  நம்பி காலத்தை விரயம் செய்வதை விட திமுக கூட்டணில் இருப்பதே மேல் என்று முடிவெடுத்துவிட்டனர்.

புதிய வரலாறு:

ஒரு சட்டமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணி அடுத்த தேர்தல் வரையிலும் நீடித்ததில்லை என்பதுதான் தமிழக அரசியல் வரலாறு.  அப்படி இருக்கும்போது  தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்திருக்கிறது திமுக கூட்டணி.  ஒரே கூட்டணி நான்காவது முறையாக தேர்தலை சந்திக்கிறது.  இந்த புதிய வரலாற்றினை படைத்திருக்கிறார் ஸ்டாலின்.

அலைகள் ஓய்வதில்லை:

தமிழகத்தில் தன்னை நோக்கி இத்தனை ஆதரவு அலைகள் ஆர்ப்பரித்து வரும்போதிலும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று ஓய்வறியாமல் செல்வதால் 2026க்கு பின்னரும் ஸ்டாலின் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்பது நிதர்சனமாகும்.

TAGGED:CMMKStalinmk stalinmkstalinonline tamil newstamil news todaytamilnadu
Previous Article Trump illegal tariffs refund சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
Next Article online tamil news இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் அனுப்பும் ரஷ்யா!
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account