[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

மனிதர்களுக்குப் பதில் AI ?- 10ல் 9 நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக அதிர்ச்சி தகவல்!

Rohini R
Last updated: 2026-03-21 2:57 pm
Rohini R Rohini R
Artificial Intelligence

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், வரும் காலங்களில் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 500 முன்னணி நிறுவனத் தலைவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 10-ல் 9 நிறுவனங்கள் (சுமார் 90%) வாய்ப்பு கிடைத்தால் தங்கள் ஊழியர்களுக்குப் பதிலாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகத் ரெஸ்யூம்பில்டர் நிறுவனம்  நடத்திய ஒரு கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளன.

மனிதர்களை விட AI மிக வேகமாகவும், துல்லியமாகவும் வேலைகளைச் செய்வதோடு, நீண்ட கால அடிப்படையில் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க உதவும் என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் புரோகிராமிங், டேட்டா என்ட்ரி மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதனால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே அமேசான் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு AI தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் உழைக்கும் வர்க்கத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.(Online Tamil News)

TAGGED:AI jobs impactAI replacing jobsAmazon AI investmentArtificial Intelligenceautomation impactFuture of Workjob automationonline tamil newsResumeBuilder surveytamil news todayTech Layoffsworkforce trends
Previous Article Donald Trump, NATO countries, “நேட்டோ நாடுகள் கோழைகள்” – ஈரானுக்கு எதிரான போரில் ஆதரவு தராததால் டிரம்ப் விமர்சனம்
Next Article Rupali Chakankar, சர்ச்சைகள் மத்தியில் மகாராஷ்டிரா மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா!
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account