ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு என்பது அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதனால் அக்கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களை பறிகொடுத்து நிற்கிறது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்தது ‘நமது எம்.ஜி.ஆர்.’ ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இது டிடிவி தினகரன் வசம் சென்றது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக இருந்த ‘ஜெயா டிவி’ சசிகலாவின் வசம் சென்றது. அதிமுகவில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட பின்னர் அதிமுகவுக்கு என்று அதிகாரப்பூர்வ ஊடகமாக உருவனாது ‘நியூஸ் ஜெ’. அதே போன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக உருவானது ‘நமது அம்மா’.

நமது அம்மா மற்றும் நியூஸ் ஜெ இரண்டும் சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரால் இயங்கி வந்தது. தற்போது அதிமுகவில் மேலும் ஏற்பட்ட பிளவில் சண்முகம், வேலுமணி இருவரும் தனி அணி அமைத்திருப்பதால் அவர்கள் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தொடர்பான செய்திகள் இவற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளன
இதனால், அதிமுகவுக்கு என்று மீண்டும் ஒரு அதிகாரப்பூர்வ நாளிதழ், ஊடகம் உருவாக்க தேவை ஏற்பட்டிருக்கிறது.