72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிராமத்துக்கதைகளின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சென்னையில் அவர் வசித்து வந்த போதிலும் அவ்வப்போது தன் கிராமத்திற்கு சென்று சொந்த மண்ணை தரிசித்து விட்டு வருவதில் அலாதியான பிரியம் அவருக்கு.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த இறுதி நாட்களில் தனது கடைசி ஆசையை மகள் ஜனனியிடம் சொல்லி இருக்கிறார்.

தன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே காட்ரோட்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அதனால்தான் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரதிராஜா உடல் பண்ணை வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கே இன்று மாலை 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.