[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

த.செ., இ.செ., பொ.செ. – மகனுக்காக எடப்பாடி படிப்படியாக வகுத்த திட்டம்

T.R.Kathiravan
Last updated: 2026-06-17 4:14 pm
T.R.Kathiravan T.R.Kathiravan

எடுத்த எடுப்பிலேயே தன் மகனை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்கினால் அதிருப்தி அதிகரிக்கும் என்பதால்  படிப்படியாக மிதுனை கட்சியின் தலைமை இடத்திற்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார் என்கின்றன ராயப்பேட்டை எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள்.

தேர்தல் தோல்வியை காரணம் காட்டி தன் மகனை அதிமுகவின் ஐடி விங் செயலாளர் ஆக்க திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி.  முதலில் ஐடி விங் செயலாளர், அடுத்து கட்சியின் இளைஞரணி செயலாளர், அடுத்து பொதுச்செயலாளர் என்பதுதான் எடப்பாடியின் திட்டமாம்.  இதற்காக தேர்தல் தோல்விக்கு தற்போது இருக்கும் அதிமுகவின் ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் தான் காரணம் என்று சொல்லி அவரை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு   மிதுனை அந்த இடத்திற்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறாராம் எடப்பாடி.  இந்த திட்டம் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் எதிரொலித்திருக்கிறது. அல்லது எதிரொலிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.  

rajsathyan edappadi palanisamy

நிர்வாகிகளே தானாக சொன்னது மாதிரி எடப்பாடி உடனே, இதில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்ல, முனுசாமியோ, அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் மிதுன் என்கிற அளவில் பேசி இருக்கிறார்.

ஏற்கனவே கற்பூரம் கரைவது போன்று அதிமுகவினர் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.  இதில் மிதுனை கட்சி பொறுப்புக்கு கொண்டு வருவதால் கட்சி மேலும் கரையும் என்று கவலை அடைகிறார்கள் ர.ரக்கள்.

TAGGED:ADMKepsmidun admkmidun palanisamymithun admkonline tamil newstamil news todaytamilnadu
Previous Article கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய சிறுமி, இன்று சப்-கலெக்டர்!
Next Article at sasi prabu venkatesan சி.வி.சண்முகம் சொன்ன பழனிசாமியின் உறவினர்கள் இவர்களா?
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account