அதிமுக அலுவலகம் மீதான தாக்குதல் புகாரில் ஜே. சி. டி. பிரபாகர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யாததால் தவெக என்ன வாஷிங்மெஷினா? அதில் பிரபாகர் சலவை செய்யப்பட்டாரா ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தவெகவுக்கு வராதவர்களை பழி வாங்குகிறதா தவெக அரசு? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையிலான ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி ஆவணங்களை கைப்பற்றியதாக சி.வி. சண்முகம் அப்போது போலீசில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் ஓ. பன்னீர்செல்வம் பெயருடன் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஜே. சி. டி. பிரபாகர் உள்ளிட்டோரின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் கொடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது சிபிசிஐடி இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. புகாரில் கூறப்பட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் உள்ளனர். ஜே சி டி பிரபாகர் தவெகவில் சட்டமன்ற உறுப்பினராகி சபாநாயகராக உள்ளார்.

இந்த வழக்கில் ஜேசிபி பிரபாகர் பெயர் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளதால் தவெக என்ன வாஷிங்மெஷினா? ஜேசிடி பிரபாகர் அதில் சலவை செய்யப்பட்டுள்ளாரா என்று பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். தவெகவுக்கு வராதவர்களை பழி வாங்குகிறதா தவெக அரசு? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.