விவாகரத்து விவகாரத்தில் சங்கீதாவின் நிலை பற்றி வொர்த் இல்லை என்று சொல்லி அலட்சியப்படுத்தி சரியான கண்டனங்களை வாங்கிக் கொண்டிருக்கிறார் விஜய்.
தன்னுடன் இத்தனை வருட காலம் வாழ்ந்த மனைவியை விஜய் பேசிய விதம் அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது. கேரியர் உச்சத்தில் இருக்கட்டும். ஆயிரம் கோடி சம்பாதிக்கட்டும். அதெல்லாம் சாதனையே இல்லை. சக மனிதனை விடுங்க குறைந்தபட்சம் தன் குடும்பத்தை எவன் கண்ணியமாக மதிக்கிறானோ அவன்தான் மனிதன் என்று பலரும் விஜய்க்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதே விவாகரத்து விவகாரத்தில் அன்றைக்கு கேரியன் உச்சத்தில் இருந்த ராமராஜன் எப்படி நடந்துகொண்டார் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது ஒரு பதிவு.
‘’ராமராஜன் விவாகரத்து விஷயமாக கோர்ட்டுக்கு வந்த பொழுது ஒரு நிருபர் நளினி பற்றியும் உங்கள் திருமணவாழ்கை பற்றியும் சொல்லுங்கள் என்று கேட்டார்

அதற்கு ராமராஜன் , ’’ நளினி என் மனைவி. என் மனைவியை பற்றி நானே உங்களிடம் சொல்வது நாகரிகமாக இருக்காது’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று விட்டார்.
விவாகரத்து தீர்ப்பான அன்றும் அதே நிருபர் ராமராஜனை வழிமறித்து இப்போதாவது பதில் சொல்லுங்கள் என்று அதே கேள்வியை திரும்பவும் கேட்டார் .
அதற்கு, ‘’விவாகரத்தான பிறகு அவர் யாரோ ? நான் யாரோ? எங்களுக்கிடையே எந்த உறவும் இல்லை. அப்படி இருக்கும் போது இன்னொருவர் வீட்டு பெண்ணை பற்றி நான் பேசுவது நாகரீகமாக இருக்காது’’ என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.