இந்திய அரசியல் வரலாற்றில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள்(Plane Crash) பல முக்கிய தலைவர்களின் உயிரைப் பறித்துள்ளன. முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்றத் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். பயணத்தின் போது ஏற்பட்ட மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, பைலட் தவறு போன்ற காரணங்கள் இந்த விபத்துகளுக்குக் காரணமாக அமைந்தன. இந்த பட்டியல், விமான விபத்துகளில் உயிரிழந்த இந்திய அரசியல்வாதிகளின் வாழ்க்கை விவரங்களையும் சம்பவ காரணங்களையும் பட்டியலிடுகிறது. அரசியல் மட்டுமல்லாமல், நாட்டையே உலுக்கிய இழப்புகள் இது.
Contents
1. ராஜசேகர் ரெட்டி (Y. S. Rajasekhara Reddy)
- பதவி: ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர்
- பிறப்பு – மறைவு: 1949 – 2009
- விபத்து: ஹெலிகாப்டர் விபத்து
- காரணம்: மோசமான வானிலை, வழித்தவறல் (Navigation error)
2. தோர்ஜி காண்டு (Dorjee Khandu)
- பதவி: அருணாச்சலப் பிரதேச முதல்வர்
- பிறப்பு – மறைவு: 1955 – 2011
- விபத்து: ஹெலிகாப்டர் விபத்து
- காரணம்: கடும் மலைப்பகுதி வானிலை, தொழில்நுட்பக் கோளாறு
3. மாதவராவ் சிந்தியா (Madhavrao Scindia)
- பதவி: காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர்
- பிறப்பு – மறைவு: 1945 – 2001
- விபத்து: தனியார் விமான விபத்து
- காரணம்: மோசமான வானிலை, விமானம் கட்டுப்பாட்டை இழந்தது
4. நடிகை சௌந்தரியா
- துறை: தமிழ், தெலுங்கு, கன்னட நடிகை
- பிறப்பு – மறைவு: 1972-2004
- விபத்து: சிறிய விமான விபத்து
- காரணம்: விமானம் புறப்பட்ட உடனே தொழில்நுட்பக் கோளாறு
- குறிப்பு: அரசியல் பிரச்சாரத்திற்காக பயணம் செய்த போது விபத்து
5. சஞ்சய் காந்தி
- பதவி: காங்கிரஸ் தலைவர், இந்திரா காந்தியின் மகன்
- பிறப்பு – மறைவு: 1946- 1980
- விபத்து: சிறிய விமான விபத்து
- காரணம்: ஆபத்தான ஏரோபாட்டிக் இயக்கம் (Aerobatic maneuver) – பைலட் தவறு
6. பால்வந்த்ராய் மேத்தா
- பதவி: குஜராத் முன்னாள் முதல்வர்
- பிறப்பு – மறைவு: 1900 -1965
- விபத்து: விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
- காரணம்: இந்திய–பாகிஸ்தான் போர் காலத்தில் தவறுதலாக பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்
7. ஜி. எம். சி. பாலயோகி
- பதவி: மக்களவை சபாநாயகர்
- பிறப்பு – மறைவு: 1951 -2002
- விபத்து: ஆந்திரப் பிரதேசம் – ஹெலிகாப்டர் விபத்து
8. தேரா நதுங்
- பதவி: அருணாச்சலப் பிரதேசத்தின் கல்வி அமைச்சர்
- பிறப்பு – மறைவு: 1964 – 2001
- விபத்து: சிறிய விமான விபத்து (Delhi)
- காரணம்: மோசமான வானிலை
9. என். வி. என். சோமு
- பதவி: மத்திய இணை அமைச்சர்
- பிறப்பு – மறைவு: 1937 – 1997
- விபத்து: விமானம் விபத்து
10. மோகன் குமாரமங்கலம்
- பதவி : ஒன்றிய எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்
- பிறப்பு – மறைவு: 1916 – 1973
- விபத்து: விமானம் விபத்து
11. அஜித் பவார்
- பதவி: மகாராஷ்டிர துணை முதல்வர்
- பிறப்பு – மறைவு: 1959 -2026
- விபத்து: ஹெலிகாப்டர் விபத்து
- காரணம்: தனியார் விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்து.


