[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

உலகின் நீருக்கடியில் இயங்கும் முதல் தரவு மையம்.. சீனாவில் உருவாக்கம்!

Saro edwin
Last updated: 2026-06-12 12:48 pm
Saro edwin Saro edwin
Data Center Technology ,

சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள லின்-காங் கடலோரப் படுகையில், ஹைக்ளவுட் நிறுவனம் உலகின் முதல் நீருக்கடியிலான தரவு மையத்தை வெற்றிகரமாக அமைத்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் ஆழத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த மையம், 24 மெகாவாட் திறனில் 2,000 சர்வர்களுடன் செயல்படுகிறது. இந்த மையத்திற்குத் தேவையான மின்சாரத்தில் 95 விழுக்காடு ஐம்பதுக்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம் பெறப்படுகிறது.சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தத் திட்டத்தில் கடல்நீரே குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படுவதால், மின் நுகர்வு 23 விழுக்காடு வரை குறைகிறது.

மேலும் நிலப்பரப்புத் தேவையை 90 விழுக்காடு மிச்சப்படுத்துவதுடன், நன்னீர் பயன்பாட்டையும் முற்றிலும் தவிர்க்கிறது. சீனாவின் ஏஐ தேவைகளுக்காகச் சீனா டெலிகாம் நிறுவனம் இதன் ஜிபியு கிளஸ்டர்களை நிறுவியுள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் 2,252 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 500 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை நோக்கி நகரும் இந்தியா, தன்னுடைய கிழக்குக் கடற்கரையில் கடல்சார் காற்றாலைகளையும் தரவு மையக் குளிர்விப்பையும் ஒன்றிணைக்க சீனாவின் இந்தத் திட்டத்தை ஒரு சிறந்த வழிகாட்டியாகக் கொள்ளலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.(ONLINE TAMIL NEWS)

TAGGED:AI InfrastructureArtificial IntelligenceChinaChina TelecomCloud computingData Center TechnologyEnergy Efficient Data CentersGPU ClustersGreen TechnologyHighCloudOffshore Wind Energyonline tamil newsRenewable EnergyShanghaiSustainable Computingtamil news todayUnderwater Data Center
Previous Article நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
Next Article ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account