[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிப்பலன்-28.04.2026

Krish Radhai
Last updated: 2026-04-29 8:16 pm
Krish Radhai Krish Radhai
Daily Horoscope,

மேஷம்

இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் கடின உழைப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். உடன்பிறந்தவர்கள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள்.

மிதுனம்

இன்று அசையும் அசையா சொத்துக்கள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும். பண வரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபார ரீதியான முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். உறவினர்களிடம் பேச்சில் கவனம் தேவை.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி

இன்று தொழில் வியாபரம் செய்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பொருளாதார மேன்மையால் நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும். கொடுத்த கடன் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் நற்பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

தனுசு

இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மகரம்

இன்று நீங்கள் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் மாற்று கருத்தால் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.

மீனம்

இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். அசையும் அசையா சொத்துக்கள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.

TAGGED:April 28 2026 HoroscopeDaily HoroscopeHoroscope Today TamilIndian Astrologyonline tamil newsTamil Astrologytamil news todayTamil Rasi PalanZodiac Predictions
Previous Article online-tamil-news தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
Next Article BJP purchase politics, தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account