ஆறு வயது சிறுவன் பாட்டியால் நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு வேலூர் மாவட்டத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி கிராமத்தில் ராஜேஷ் -ஆசா தம்பதியினர் வசித்து வருகின்றனர். திருமணத்திற்கு பின்னர் குழந்தை பிறந்த பின் 5 ஆண்டுகள் இத்தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் தந்தை வழி பாட்டி விஜயா வீட்டில் ஆறு வயது சிறுவன் முகிலன் வளர்ந்து வந்திருக்கிறான்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜேஷ்- ஆசாத் இருவரும் கசப்பை மறந்து சேர்ந்துள்ளனர். இதை அடுத்து இவர்கள் இருவரும் திருப்பூரில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவன் முகிலன் பாட்டி விஜயா வீட்டில் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் ராஜேஷ் மற்றும் ஆஷாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை அடுத்து சிறுவன் முகிலனின் தந்தையும் தாயும் மேல்பட்டிக்கு விரைந்துள்ளனர்.

விஜயாவும் அவரது மகள் ரேவதியும் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் சொல்லி வருகின்றனர். அதற்கேற்றார் போல் வீடு முழுவதும் மாந்திரீகம் செய்வதற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்து இருக்கின்றன. இதனால் சிறுவன் முகிலனை விஜயாவும் ரேவதியும் சேர்ந்து நரபலி கொடுத்திருக்கலாம் என்று முகிலனின் தாய் ஆசா குற்றம் சாட்டுகிறார்.
சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆசாவின் குற்றச்சாட்டின் பெயரில் மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் முகிலனின் மரணத்திற்கு காரணம் நரபலியா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு வேலூர் மாவட்டத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.



