திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும் என்று தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணிபுரிந்த ஆதவ் அர்ஜூனா அதன்பின்ன விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அங்கு ஏற்பட்ட நெருக்கடிகளால் தவெகவில் இணைந்தார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கருப்பு -சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவுக்கு வாக்களித்தார் விஜய். அவர் வாக்களித்ததோடு அல்லாமல் தான் உதயசூரியன் சின்னத்திற்குத்தான் வாக்களித்தேன் என்பதை தெரிவிக்கும் – பிரச்சாரம் செய்யும் விதமாகவே கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்தார் என்று உண்மையைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் ஆதவ் அர்ஜூனா.

இப்போது அவர் உண்மையை வெளிப்படையாக பேசி இருக்கிறார். தவெகவின் வில்லிவாக்கம் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. வில்லிவாக்கத்தில் மாற்றுக்கட்சியினர் 150 பேர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும் ’’ என்று பேசினார்.

இது டங் ஸ்லிப் என்று தவெகவினர் சமாளித்தாலும், மனதில் உள்ளதுதான் வெளியே வந்திருக்கிறது என்கின்றனர் மக்கள்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேட்டி வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



