• அரசியல்
    அரசியல்Show More
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    Jeffrey Epstein suicide note
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    2026-05-07
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    2026-05-07
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    online-tamil-news-world-news-tamil
    உலகம்
    அமெரிக்காவுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை!
    2026-01-24
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Donald Trump-warning-Mexico -Colombia -Cuba-US Latin America politics-Trump foreign policy
    உலகம்
    வெனிசுலாவை தொடர்ந்து மெக்சிகோ, கொலம்பியா & கியூபா நாடுகளை குறிவைக்கும் ட்ரம்ப் !
    2026-01-05
    Dalai Lama Grammy win, 14th Dalai Lama,Online Tamil News
    உலகம்
    90 வயதில் கிராமி விருது வென்ற தலாய் லாமா !
    2026-02-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : ஓட்டுக்கு மட்டும்தானா ஆட்சி?.
Share
32°C
Chennai
mist
32° _ 31°
76%
5 km/h
Fri
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : ஓட்டுக்கு மட்டும்தானா ஆட்சி?.

Last updated: 2026-02-27 10:04 am
Spark Desk 52 Views
Share
Sri Lankan Tamils
SHARE

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இனப் படுகொலையின் போது அங்கிருந்த ஈழத்தமிழர்கள் பலர் படகு மூலமாக உயிர் தப்பி தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் இங்கு பல மாவட்டங்களிலும் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். நூற்றுக்கும் அதிகமான அந்த முகாம்களில் தற்போது 60 ஆயிரம் வாழ்கிறார்கள். முகாம்களுக்கு வெளியே காவல்துறையில் பதிவு செய்து வாழ்பவர்கள் ஏறத்தாழ 40 ஆயிரம் பேர்.

தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இத்தனை ஆண்டுகளாகியும் குடியுரிமை கிடையாது. அவர்கள் நாடு இழந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாக்குரிமையும் கிடையாது. ஓட்டு இல்லாவிட்டால் ஒரு கவுன்சிலர் வேட்பாளர்கூட அந்தப் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார். ஆனால், 2021ல் தி.மு.க ஆட்சி அமைந்தது முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர் வாழும் முகாம்கள் பலவற்றிற்கு சென்று ஆய்வு செய்கிறார். அங்குள்ள ஈழத்தமிழர்களின் தேவையைக் கேட்கிறார். அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளைத் திறந்து வைத்து, அவற்றைப் பார்வையிட்டு, அங்குள்ள பெண்களிடம் மகளிர் உரிமைத் தொகை வருகிறதா, சிறப்புத்தொகையுடன் சேர்த்து 5000 ரூபாய் வந்ததா, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் எப்படி செயல்படுகிறது என்றெல்லாம் கேட்டறிந்தார். அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதில் சொல்லி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

தி.மு.க. ஆட்சி வந்ததும், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம் செய்து சட்டமன்றத்தில் அறிவித்தார் முதலமைச்சர். பல ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வரும் தகரக்கொட்டகைகளுக்குப் பதில் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். அவர்களின் வாழ்க்கை மேம்பட 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை அறிவித்தார். இதனை செயல்படுத்தும் மறுவாழ்வுத்துறைக்கு உதவுவதற்கான இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு ஒன்றையும் அமைத்தார் முதலமைச்சர்.

ஐந்தாண்டுகள் நிறைவில், வேலூர் மாவட்டம் மேலமொணவூர் முகாமில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் வரை 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 4,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முகாம்களில் வசிக்கும் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாத உதவித்தொகை, குடும்பத் தலைவியருக்கு மகளிர் உரிமைத் தொகை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான நிதியுதவி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திறன்மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம், விளையாட்டுப் போட்டிகள் என கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் கண்டுள்ளனர்.

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார்கள். குடியுரிமை இல்லை என்பதால் மருத்துவம் படிக்க முடியாது. அரசு வேலைக்கு செல்ல முடியாது. ஆனாலும், டி.சி.எஸ். போன்ற தனியார் நிறுவனங்களில் உயர்தர வேலையை அடைய முடிகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் போராட்டத்தின் விளைவாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உரிய ஆவணங்களுடன் 12 பேருக்கு குடியுரிமை பெற்றுத்தரப்பட்டுள்ளது. முகாமில் வசிக்கும் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை சட்டத்தில் உள்ள வழிகள் வாயிலாகக் குடியுரிமை பெறுவது குறித்தும், அதற்காக மத்திய பா.ஜ.க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஒத்துழைப்பு பணிகள் குறித்தும் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் சார்பில் இடைக்கால அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அண்மையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

பா.ஜ.க அரசு நினைத்திருந்தால் சி.ஏ.ஏ. சட்டத்திலேயே இந்து மதத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்க வழி செய்திருக்க முடியும். ஆனால், முஸ்லிம் எதிர்ப்புக்காக கொண்டு வரப்பட்ட பா.ஜ.க. அரசின் சி.ஏ.ஏ.வின் நோக்கம், இந்துக்களை பாதுகாப்பதல்ல என்பது இதன் மூலம் அம்பலமாகிவிட்டது.

மத்திய அரசு எப்போது குடியுரிமை தரும் என்று தெரியாத நிலையிலும், தமிழ்நாட்டை நம்பி வந்த இலங்கைத் தமிழர்களான யாரும் இங்கே அகதிகளில்லை. எங்கள் தமிழ்ச் சொந்தங்கள்தான் என்பதை கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களால் நிரூபித்திருக்கிறார் முதலமைச்சர். அகதி என்பது இதயத்தைப் பிளக்கும் வலி நிறைந்த வார்த்தை. அதை மாற்றி மாறுவாழ்வு முகாம் என்பதை பெயரிலும் செயலிலும் நிறைவேற்றி, ஓட்டு இல்லாத மக்களுக்கும் ஆட்சியின் திட்டங்கள் கிடைக்கச் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.(Online Tamil News)

TAGGED:BJP central governmentcitizenship issueDMK GovernmentEelam TamilsM. K. Stalin initiativesSri Lankan TamilsTamil Nadu rehabilitation camps
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead1
Wink0
Previous Article Daily Horoscope 27 February 2026 இன்றைய ராசிப்பலன் –  27.02.2026
Next Article Pakistan Afghanistan border attack, 55 Pakistani soldiers killed, ஆப்கானிஸ்தான் எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு !

உலகம்

Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
May 8, 2026 at 10:54 am
vijay congress
பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
May 7, 2026 at 5:29 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?