• அரசியல்
    அரசியல்Show More
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
    vijay rahul
    விஜய் – ராகுல் கூட்டாக அளித்த உறுதி
    May 6, 2026 at 3:53 pm
    vijay eps
    விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்
    May 6, 2026 at 3:17 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
    ONLINE-POLITICAL-NEWS
    TNElection 2026 Trends & People Mindset!
    2026-05-06
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    2026-05-06
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Prince Andrew arrested, King Charles brother,Online Tamil News
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய மன்னர் சார்லஸின் தம்பி ஆண்ட்ரூ கைது !
    2026-02-20
    Kim Jong Un missile test
    உலகம்
    எதிரிகளுக்கு எச்சரிக்கை: ஏவுகணை சோதனையை நடத்திய கிம் ஜாங் உன்!
    2026-03-11
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    Russia blocks WhatsApp-Online Tamil News
    உலகம்
    வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்யாவில் தடை!
    2026-02-12
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
Share
30°C
Chennai
scattered clouds
31° _ 30°
78%
6 km/h
Wed
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!

Last updated: 2026-04-11 12:30 pm
Spark Desk 88 Views
Share
online-tamil-news
SHARE

இந்திய நாடாளுமன்றத்திற்கோ மாநில சட்டமன்றங்களுக்கோ தேர்தலை தேதியைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிடும். மார்ச் 15ந் தேதி மாலை 4 மணியளவில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 5 மாநிலத் தேர்தல்களுக்கானத் தேதியை அறிவித்ததும், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

இனி தேர்தல் முடிவுகள் வெளியாகி, மீண்டும் ஆட்சியமையும் வரை, அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது. முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது. அவர்களின் கார்களில் உள்ள தேசியக் கொடிகள் அகற்றப்பட்டு, கட்சிக் கொடிகள் பறக்கும். அரசு அலுவலகங்களிலும் மற்ற இடங்களிலும் உள்ள முதலமைச்சரின் படங்கள் அகற்றப்படும். இவையெல்லாம் நடைமுறையானவை. எனினும், அவையும்கூட சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் பசியுடன் இருப்பவர்களுக்குத் தீனியாக மாறுவதைக் காண முடிகிறது.

சுவர்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் விளம்பரங்களின் மீதும் வெள்ளையடிக்கப்படுவதும், சாலைகளில் உள்ள பேனர்கள் அகற்றப்படுவதும் உள்ளாட்சி நிர்வாக ஊழியர்களின் பெரும் வேலை. இதில் மிகவும் ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருப்பது, தலைவர்களின் சிலைகள் மீது துணியை சுற்றி வைப்பது அல்லது கோணிசாக்கு போட்டு மூடி வைப்பதாகும். வாழ்ந்து மறைந்த தலைவர்களின் பொதுநலப் பங்களிப்புக்காகவும், அவர்களின் தியாகங்களுக்காகவும், அவர்களின் கருத்துகளுக்காகவும் சிலைகள் வைத்து மரியாதை செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் உள்ளது. தேர்தல் நேரத்தில் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் சிலைகளை துணியை சுற்றி மூடி வைக்கவேண்டிய அவசியம் என்ன? மறைந்த தலைவர்கள் எந்தக் கட்சிகளை சார்ந்தவர்களோ அந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டு விடும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது.

காமராஜர் இருந்த காங்கிரஸ் கட்சியா இப்போது இருக்கிறது? அவர் வாழ்ந்த காலத்திலேயே ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று பிரிந்துவிட்டது. அதன்பிறகு எத்தனையோ பிரிவுகள். இப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. கூட்டணிக்கே போய்விட்டது. அந்தக் கட்சியினர் காமராஜர் சிலையைப் பார்த்தால் எந்த சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்? காமராஜர் காலத்து இராட்டை சின்னமே இப்போது இல்லை. அதே போலத்தான் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டவர்களின் சிலைகளைப் பார்த்து அவரவர் கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்பதும் தேர்தல் ஆணையத்தின் மூடநம்பிக்கைதான்.

வாழ்ந்து மறைந்து மக்களின் மனங்களில் இடம்பெற்றிருக்கும் தலைவர்களின் சிலைகள் மீது துணியை சுற்றியும், கோணிசாக்கால் மூடியும் அவர்களின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளும் ஒரு சேர வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது கட்சிகளின் சார்பிலான கோரிக்கை என்றால், பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி வைக்கப்படுகின்றன.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் நிர்வாகிகள்-தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிறைய பரிசுகளை வழங்குவது வழக்கம். அத்துடன், ரொக்கப் பணமாகவும் தரப்படும். இவற்றைத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. வாக்குகள் விலைக்கு போகக்கூடாது என்பது மிக முக்கியமானது. அதுபோலவே, அரசியலுக்கு அப்பாற்பட்ட வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதும் மிகவும் முக்கியமானதாகும்.(Online Tamil News)

தெருத்தெருவாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் காவல்துறையினர் நடத்தும் சோதனையில் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால் வழக்குப் போடப்படுகிறது. அதற்கு குறைவான தொகையாக இருந்தாலும், எதற்காக இந்தப் பணம், எங்கே எடுத்துப் போகிறீர்கள் என்று கேள்விகள் கேட்டு எளிய மக்களைத் துவைத்து எடுக்கிறார்கள். ஒரு பவுன் தங்கம் ஒரு இலட்சத்துக்கு மேல் விற்பனையாகிற காலத்தில் இருபதாயிரம், முப்பதாயிரம் ரூபாய்க்கு விலாவாரியாக கணக்கு கேட்டு பொதுமக்களையும் வணிகர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக புகார்கள் வெளிப்படுகின்றன.
இது பங்குனி மாதம். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் அதிகம் நடக்கக்கூடிய மாதம். மண்டப வாடகை, விருந்து செலவு, பட்டுப்புடவை, நகை ஆகியவற்றுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். திருமண ஆர்டர்களான வெள்ளி பாத்திரம், நகை ஆகியவற்றை வணிகர்கள் கொண்டு போய் கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கான எளிய நடைமுறையை உருவாக்காமல், தேர்தல் நேரக் கெடுபிடியாக பொதுமக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை தலைமைத் தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

TAGGED:cash seizure electionelection commission indiaelection controversy indiaelection enforcement indiaelection law indiaelection news indiaelection restrictionsindia elections 2026indian politics newsmodel code of conductpolitical campaign rulespublic issues election timeTamil Nadu Electionsvoting awareness india
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Daily Horoscope 19 March 2026 இன்றைய ராசிப்பலன்- 19.03.2026
Next Article Karur rally stampede 2025 விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ONLINE-POLITICAL-NEWS
TNElection 2026 Trends & People Mindset!
May 6, 2026 at 6:37 pm
leema
லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
May 6, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?