டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு, ‘’பாமகவும் மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கே’’என்கிறார்.
ஆனால் ராமதாஸ் தரப்போ, அன்புமணியின் பதவி காலாவதியாகி விட்டது. தேர்தல் ஆணையத்திடம் மோசடியான ஆவணங்களை கொடுத்திருக்கிறார்கள். அன்புமணி தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. முகத்தில் கரியை பூசிவிட்டதால் வெளியே வந்து பொய் பேசுகிறார்கள் என்கிறது.

பாலுவோ, நீதிமன்ற தீர்ப்பை ராமதாஸ் தரப்பு ஏற்கவில்லை என்கிற போதே எங்கள் தரப்புக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது என்பது தெரியும் என்கிறார்.
காலாவதியான ஆவணங்களை கொடுத்து அன்புமணிதான் தலைவர் என்றும், பாம்பழ சின்னத்தையும் தங்களுக்கு என்று நிறுவ பார்க்கிறார்கள். இதனால் மாம்பழ சின்னம் முடக்கப்படலாம் என்கிறார் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள்.(Online Tamil News)