• அரசியல்
    அரசியல்Show More
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    Air France Flight 447 crash
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    2026-05-22
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Colombia plane crash, small plane crash Colombia, Online Tamil News
    உலகம்
    கொலம்பியாவில் விமான விபத்து – 15 பேர் உயிரிழப்பு
    2026-01-29
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: அறிமுகமானது Emotion AI…இனி உங்கள் கார் பேசும், உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும்..!
Share
31°C
Chennai
mist
31° _ 30°
71%
5 km/h
Sun
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

அறிமுகமானது Emotion AI…இனி உங்கள் கார் பேசும், உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும்..!

Last updated: 2025-12-06 10:24 am
Spark Desk 55 Views
Share
Emotion-ai-artificail-technology-aiupdate-technology-technews-tamilnewsupdate-cars-socialmedia-india-tamilnadu
SHARE

செயற்கை நுண்ணறிவு குறித்து உலகம் இன்று கேட்கும் பெரும்பாலான செய்திகள் ரோபோட் மனிதரைப் போல பேசுகிறது, AI கவிதை எழுதுகிறது, ஓவியம் வரைந்துவிடுகிறது, நோய்கள் கண்டறிகிறது. ஆனால் அந்த AI இப்போது மனிதர்களின் மன உலகிற்குள் சென்று, அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முயல்கிறது என்பதே புதிய செய்தி. இந்த மாபெரும் மாற்றத்திற்குப் பெயர் Emotion AI.

Contents
Driver Monitoring System — ஓட்டுனரின் உணர்வை புரிந்துக்கொள்ளும் கார்1. தனியுரிமை அச்சுறுத்தல்2. தவறான மதிப்பீடுகள் ஏற்படும் சாத்தியம்3. அதிகார துஷ்பிரயோகம்Emotion AI வாய்ப்புகளும், வரவிருக்கும் எதிர்காலமும்

மனிதர்களின் முகபாவனைகள், குரல் அதிர்வு, கண் அசைவுகள், சிரிப்பின் நுண்ணிய மாற்றங்கள்… இவை அனைத்தையும் வைத்து ஒருவரின் உணர்ச்சி நிலையைப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்ட AI தொழில்நுட்பமே இந்த Emotion AI.

1742650209584

Emotion AI என்றால் என்ன?

எந்த மனிதரையும் நம் உடனடியான உணர்ச்சிகளைப் பார்க்க முடியும் சிரிப்பில் இருக்கும் மகிழ்ச்சி, கண்களில் தெரியும் பயம், குரலில் மறைந்திருக்கும் சங்கடம்… செயற்கை நுண்ணறிவு இதுவரை செய்ய முடியாத ஒன்று இதுதான்.

ஆனால் Emotion AI தொழில்நுட்பம் வருவதால்:

  • உங்கள் குரலின் அதிர்வை கேட்டு நீங்கள் கோபமாக உள்ளீர்களா என்பதைப் புரியும்,
  • முகத்தில் சோர்வு தெரிந்தால் நீங்கள் கவலையில் உள்ளீர்கள் என உணரும்,
  • கண் அசைவைக் கண்காணித்து நீங்கள் வாசிப்பதில் ஆர்வமாக உள்ளீர்களா அல்லது மனம் இழந்திருக்கிறீர்களா என்பதை அறியும்.

Hume AI போன்ற நிறுவனங்கள் உருவாக்கியுள்ள Empathic Voice Interface (EVI) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
நீங்கள் பேசும்போது குரலில் நடுக்கம் இருக்கிறதா, சோகம் கலந்திருப்பதா, அல்லது தன்னம்பிக்கை குறைந்திருக்கிறதா என்று கண்டறிந்து, அதற்கேற்ப பதில் வழங்கும்.

ஒருவிதத்தில் பார்த்தால், AI உங்களுடன் பேசுவதற்கும் மேலாக, உங்களை உணர முயற்சி செய்கிறது.

கார்களில் புரட்சியை உருவாக்கும் Emotion AI

இன்றைய நவீன கார்கள் ஏற்கனவே சென்சார்கள், பாதுகாப்பு அமைப்புகள், தானியங்கி பிரேக்கிங் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. ஆனால் Emotion AI சேரும் போது, கார் “அறிவாளியாக” மாறும்.

Emotion AI picture 3 copy 1024x600 1

Driver Monitoring System — ஓட்டுனரின் உணர்வை புரிந்துக்கொள்ளும் கார்

Volvo, Mercedes-Benz உள்ளிட்ட கார் நிறுவனங்கள்:

  • ஓட்டுனர் தூக்கமா தருகிறாரா,
  • கவனம் சிதறுகிறதா,
  • மன அழுத்தத்தில் உள்ளாரா,
  • மது அருந்தியிருக்கிறாரா,

என்பதை கண்களுக்கு, முகத்திற்கு, குரலுக்கு ஏற்ப கண்டறியும் தொழில்நுட்பத்தை கொண்டுவருகின்றன.

Smart Eye எனப்படும் சிஸ்டம்
டிரைவரின் கண்களை நொடியில் ஆய்வு செய்து, சோர்வு அல்லது மயக்கத்தை கண்டறிந்தால் உடனே எச்சரிக்கை விடுக்கும்.

ஐரோப்பாவில் 2026 முதல் இந்த அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் ஒன்றே:
மனித தவறால் ஏற்படும் விபத்துகளை கடுமையாகக் குறைப்பது.

வேலைவாய்ப்பு, நேர்காணல் உலகை மாற்றும் Emotion AI

சில நிறுவனங்கள் தற்போது ஆன்லைன் இன்டர்வியூவில்:

  • விண்ணப்பதாரரின் முகபாவனைகள்,
  • குரலின் சீர்மை,
  • கண் தொடர்பு,
  • பதட்டம்,

அனைத்தையும் Emotion AI மூலம் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டன.Zoom நிறுவனமும் விற்பனைத் துறையில் வாடிக்கையாளர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள இதே முயற்சியை மேற்கொண்டது. ஆனால் “மனதை ரகசியமாகப் படிக்க முயற்சி” என விமர்சனங்கள் எழுந்ததால், அது எதிர்ப்புடன் சந்திக்கப்பட்டது.

ஆபத்துகள்: Emotion AI–க்கு எதிரான உலகளாவிய கவலைகள்

தொழில்நுட்ப வளர்ச்சி நல்லது. ஆனால் அதே நேரத்தில் சில மிகப் பெரிய பிரச்சினைகளையும் உருவாக்கும்.

1. தனியுரிமை அச்சுறுத்தல்

ஒருவரின் அனுமதியின்றி:

  • அவரின் முகத்தை ஸ்கேன் செய்து,
  • குரலில் உள்ள உணர்வுகளை ஆய்வு செய்து,
  • மனநிலையைப் புரிந்து கொள்ளும் முறையை,

பெரும்பாலான தனியுரிமை வல்லுநர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

2. தவறான மதிப்பீடுகள் ஏற்படும் சாத்தியம்

அனைவரின் முகபாவனைகள் ஒரே மாதிரி இருக்காது.
ஒருவருக்கு சீரியஸாக இருப்பது சாதாரணம்; மற்றொருவருக்கு அது கோபமாக படலாம். AI இத்தகைய நுணுக்கங்களை தவறாக புரிந்து கொள்ளலாம்.

3. அதிகார துஷ்பிரயோகம்

பள்ளிகள், நிறுவனங்கள், அலுவலகங்கள்:

  • மாணவர்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள்,
  • ஊழியர்கள் எப்போது மனச்சோர்வாக இருக்கிறார்கள்,

இவற்றை ரகசியமாக கண்காணிப்பது மிகவும் ஆபத்தான செயலாகும்.

EU–வின் கடுமையான தடைகள்

இத்தகைய ஆபத்துகள் இருப்பதால்,
ஐரோப்பிய ஒன்றியம் (EU AI Act) Emotion AI–யைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு துறைகளில் நேரடியாக தடை விதித்துள்ளது:

  • பள்ளிகளில்
  • பணிப்புரியும் இடங்களில்
  • பொது கண்காணிப்பு மையங்களில்

Emotion AI மூலம் உணர்வுகளை கண்காணிப்பது அத்துமீறல் என EU அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் மற்ற நாடுகளுக்கும் முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Emotion AI வாய்ப்புகளும், வரவிருக்கும் எதிர்காலமும்

ஆபத்துகள் இருந்தாலும், Emotion AI வழங்கும் வாய்ப்புகள் பல:

  • மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க உதவலாம்
  • தனிப்பட்ட உதவியாளர்கள் உணர்வுகளைப் புரிந்து சிறப்பாக பதில் வழங்கலாம்
  • கார்கள் விபத்துகளைத் தடுக்கும்
  • மருத்துவ துறையில் நோயாளிகளின் உணர்வுகளை ஆய்வு செய்யலாம்
  • தொடர்பாடலில் மனிதருக்கு நெருக்கமான AI கிடைக்கும்
Emotion-ai-artificail-technology-aiupdate-technology-technews-tamilnewsupdate-cars-socialmedia-india-tamilnadu

சாதாரணமாக, மனிதனின் உடன்பிறப்பைப் போல AI நடந்து கொள்ளும் நாள் மிக அருகில் இருக்கிறது.

Emotion AI என்பது சாதாரண தொழில்நுட்ப மாற்றம் அல்ல.
அது மனித மன உலகை தொழில்நுட்பம் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயம்.

இது ஒரு பக்கம்:

  • பாதுகாப்பு,
  • வசதி,
  • நலம்,

என்று பல நன்மைகளைக் கொண்டுவந்தாலும்,

மற்றொரு பக்கம்:

  • தனியுரிமை மீறல்,
  • தவறான கண்காணிப்பு,
  • மனநிலை கட்டுப்பாடு போன்ற ஆபத்துகளையும் உருவாக்குகிறது.

ஆகையால், இந்த தொழில்நுட்பம் எங்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதே எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இனிமேல் நம்மை விட நம் மெஷின்களுக்கே நம்மைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கும் காலம் வர போகிறது.

TAGGED:aiartificialintelligencecaremotionaifacialexpressionstechnewstechnology
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Netflix,Warner Bros,7 -lakh- 40 -thousand -crore- rupees-Company -$82.7 billion வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது நெட்ஃப்ளிக்ஸ்
Next Article Central Government-Google-Apple-Cyber ​​security -government-Smartphone-Location -tracking -program பொதுமக்களை கண்காணிக்க ஒன்றிய அரசு திட்டம் ?- Google, Apple நிறுவனங்கள் எதிர்ப்பு

உலகம்

Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
Samsung Electronics,
48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
உலகம் May 21, 2026 at 3:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kovai sulur
கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
May 23, 2026 at 4:37 pm
sulur3
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
May 23, 2026 at 1:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?