இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது நீலாங்கரை இல்லத்திற்கு அவரின் மனைவி வந்தார்.
காரில் இருந்து இறங்கிய அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். பாரதிராஜாவின் உடலைப் பார்த்ததும், ‘’என்னைய அனாதையா விட்டுட்டு போயிட்டீங்களே…’’ என்று கதறி அழுதார்.
அப்போது அங்கே நின்றிருந்த இசையமைப்பாளர் கங்கை அமரன், ‘’கடைசியில யாரும் இல்லாம ஓடிப்போயிட்டீங்கள்ல..போனை கூட எடுக்கல..போன பிறகு எல்லோரும் வர்றீங்களா…கஷ்டமா இருக்கு.. கஷ்டமா இருக்கு..கடைசியில அவர் அனாதையா.. கடைசியில அவர் அனாதையா..’’ என்று ஆத்திரத்தில் சத்தம் போட்டார்.
உடனே, நடிகை ராதிகா ஓடிவந்து , இப்போது அதைப்பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி கங்கை அமரனை சமாதானப்படுத்தினார்.

தேனி மாவட்டம் அல்லிநகரத்து சின்னசாமிதான் சினிமாவின் சூரியனாய் ஒளித்த பாரதிராஜா. இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோர் சென்னை வந்ததற்கும், ஆரம்பகால வாழ்க்கைக்கு உதவியதும் பாரதிராஜாதான். அந்த வகையில் பாரதிராஜாவின் குடும்பத்தினருடன் கங்கை அமரன் எப்போதும் நெருக்கமாக இருந்தவர்.
கடந்த ஆண்டு மகன் மனோஜ் இறந்த பின்னர் பாரதிராஜாவின் கவலையில் படுத்த படுக்கையானார். இந்த சூழலில் கடைசிக்காலத்தில் மனைவி உள்ளிட்ட முக்கிய உறவினர்கள் பாரதிராஜாவின் அருகில் இல்லை என்கிற ஆத்திரத்தை கொட்டியிருக்கிறார் கங்கை அமரன்.
கங்கை அமரனின் கோபத்தை பார்த்திருந்த செய்தியாளர்கள் அது குறித்து அவரிடம் கேட்க, முதலில் ‘நோ கமெண்ட்ஸ்’ என்று சொன்னார். மீண்டும் அது பற்றி கேட்க, ’’எங்கள் குடும்பத்திற்குள் சண்டை வரும். அதை சரி செய்ய நான் எல்லாம் இருக்கேன். என்ன நடந்தது என்று வெளியே சொல்ல முடியாது’’ என்றார்.