• அரசியல்
    அரசியல்Show More
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    Air France Flight 447 crash
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    2026-05-22
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Bermuda-Triangle-Atlantic-Ocean-mystery-revealed-by-scientists-sciencenews-worldnews
    உலகம்
    பெர்முடா முக்கோணம்: மர்மங்களுக்குள் மறைந்த பூமியின் வரலாறு..!
    2025-12-15
    volcano-Earth-Secrets-research-truths-about-volcanoes-global-warming-climate-change-worldnews-tamil-science-news-tamilnews
    உலகம்
    எரிமலைகளுக்குள் என்ன நடக்கிறது?
    2026-01-14
    Border issue-Thailand-Cambodia-Conflict-Military conflict-Trump-Conflict again
    உலகம்
    தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல்
    2025-12-08
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: பிளாக் மெயில் செய்யும் இண்டிகோ! ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் அல்லாடும் விமான சேவை!  
Share
31°C
Chennai
mist
31° _ 30°
71%
5 km/h
Sun
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

பிளாக் மெயில் செய்யும் இண்டிகோ! ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் அல்லாடும் விமான சேவை!  

Last updated: 2025-12-08 9:42 am
T.R.Kathiravan 44 Views
Share
indigo
SHARE

முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் உள்நாட்டு விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.  இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் தவறன கொள்கையினால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு துறையில் ஒரு நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினால், நாட்டின் முக்கிய சேவைகள் தனியார் வசம் சென்றால் பொதுமக்கள் எவ்வாறு இன்னலுக்கு ஆளாகுவார்கள், பொருளாதாரம் எவ்வாறு சீர்குலையும் என்பதை ‘இண்டிகோ’ நிறுவனம் உணர்த்தி இருக்கிறது.

indigo issue

இண்டிகோ, ஏர் இந்தியா என்று இரண்டு நிறுவனங்கள் மட்டுமே விமானத்துறையில் கோலோச்சும் நிலையில் இண்டிகோ விமான சேவை முடக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.  நாடே ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.  விமானம் ரத்து ஆனதால் புதுமண ஜோடி ஆன்லைன் மூலம் ரிசப்ஷனில் பங்கேற்க வேண்டியதாகி இருக்கிறது.  மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர். கல்வி தொடர்பாக பல மாணவர்களும், தொழிலதிபர்களும் பாதிப்படைந்துள்ளனர்.  நாட்டின் ஒவ்வொரு விமான நிலையத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்துக்கிடந்து அல்லாடிக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.

indigo issue child

அரசு சார்பாக விமான சேவை இல்லாமல் போனதுதான் இந்த அவல நிலைக்கு காரணம். அரசு சார்பில் இயங்கி வந்த விமானத்துறையை தனியாருக்கு ஒன்றிய பாஜக அரசு தாரைவார்த்தது மட்டுமல்லாமல், விமானதுறையில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது.  அதுதான் இன்றைக்கு  நாடு சந்திக்கும் கொடுமைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அரசு நடத்து சேவை என்றால் பொதுநலனே முதன்மையாக கருதப்பட்டிருக்கும்.  தனியார் சேவை என்பதால்தான் லாபம் மட்டுமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது.  பொதுநலன் இல்லாது லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் போதுதான் பணியாளர் குறைப்பு, செலவு சுருக்கம், சேவை குறைப்பு உள்ளிட்டவை மேலோங்கி நிற்கிறது. இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாது நாட்டின் முக்கிய சேவைகளை அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்டது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

இதே நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் தடுமாறி, உலகில் இந்தியாவின் மீதான நம்பிக்கை குறையும் அபாயம் இருக்கிறது.  

indigo flights

மக்கள் நலனை சிந்திக்காமல் தேசிய சொத்துக்களை எல்லாம் தனியார் கைகளில் திணித்து சேவை நாடு என்பதை மாற்றி இந்தியாவை சந்தை நாடாக மாற்றி இப்படி மக்களை பாடாய்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

ஒரு துறையில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினால் அது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பொருந்தாது.  ஆனால், ஒன்றிய பாஜக அரசினால் நாட்டின் பொருளாதாத்திஉல் பல துறைகளில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் போக்கு இருக்கிறது.  போட்டி இல்லாததால் அவர்கள் இஷ்டத்திற்கு ஆடுவார்கள்.  மக்களை  ஆட்டிவைப்பார்கள். அப்படித்தான் விமானத்துறையும் ஆகிவிட்டது.  

இதைத்தான் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சுட்டிக்காட்டுகிறார். அவர், ‘’இந்திய விமானத்துறை  மிக துடிப்பாகவும் போட்டிகள் கொண்டதாகவும் இருந்தது.   அது எப்படி  இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப்போனது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்’’ என்கிறார்.  எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தியும்,  ‘’விமானத்துறையை ஒரு நிறுவனத்தின் ஆதிக்கத்தின் பாஜக விட்டதன் விளைவுதான் விமானப் போக்குவரத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை. எந்த துறையாக இருந்தாலும் அதில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.  ஒரு நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமையக்கூடாது’’ என்கிறார்.

indigo issue2

அண்மைக்காலமாக நடந்த சில விமான விபத்துகளுக்கான காரணங்களை அறிந்த போது விமானிகளுக்கு ஏற்பட்ட பணிச்சுமையின் காரணமாகவே மன உளைச்சலில்   அதிக விபத்துகள் ஏற்பட்டதாக தெரியவந்ததன் அடிப்படையிலேயே , பயணிகள், விமானப் பயணங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் FDTL (Flight Duty Time Limit)  எனும் புதிய விதியை கொண்டு வந்தது. அதாவது விமானிகளுக்கான வாராந்திர விடுப்பு நேரத்தை அதிகப்படுத்தியது.  அவர்களுக்கு அதிக ஓய்வு கொடுத்தால்தான் பயணங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதால்தான் இந்த விதிகள் விதிக்கப்பட்டன.  விமானிகள் எவ்வளவு நேரம் பறக்க வேண்டும், எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பற்றியது இந்த புதிய விதி. இதனால் கூடுதல் விமானிகளை நியமிக்க வேண்டிய சூழலுக்கு ஆளானது இண்டிகோ நிறுவனம்.  

கூடுதல் விமானிகளை நியமித்து அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதற்கு பதிலாக, பிளாக் மெயில் செய்து மத்திய அரசையே விதிகளை வாபஸ் வாங்க வைத்திருக்கிறது இண்டிகோ நிறுவனம்.   

modi bjp

கட்டுப்பாடுகள் விதித்தால் என்னவாகும் என்பதை காட்டி ஒன்றிய அரசை மிரட்டி பணிய  வைத்திருக்கிறது இண்டிகோ நிறுவனம்.  இண்டிகோவின் மிரட்டலுக்கு பயந்து இரவோடு இரவாக விதிமுறைகளை வாபஸ் வாங்கி பின் வாங்கி இருக்கிறது ஒன்றிய அரசு.  இது வரன் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதையாகிவிட்டது.  

விமான பயணத்திற்கு செலுத்திய கட்டண பணத்தை கூட முழுமையாக இண்டிகோ நிறுவனம் திருப்பி தரவில்லை என்று மக்கள் குமுறுக் கொண்டிருக்கிறார்கள்.  அழுத்தங்களின் காரணமாக ஒருவேளை திருப்பி தருவதாகச் சொன்னாலும் கூட மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இண்டிகோ நிறுவனத்தாலும், ஒன்றிய அரசாலும் சரி செய்ய முடியுமா? என்று எழும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் இவர்கள்.  

TAGGED:blackmailIndiGoindigo flightsUnion government
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article PAN-Permanent-Account-Number-New-rules-for-2026-central-govt-CBDT-income-tax-kyc-tamilnews-updates-india 2026 ஜனவரி 1 முதல் இதை செய்ய தவறினால் உங்கள் PAN செயலிழக்கும்..விவரம் உள்ளே…!
Next Article Cinema producer - Dinesh Raj - drug cases - Sarbuddin - Drug -Supporting actresses -Arrest போதை பொருள் வழக்கில் சிக்கும் சினிமா துணை நடிகைகள் ?

உலகம்

Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
Samsung Electronics,
48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
உலகம் May 21, 2026 at 3:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kovai sulur
கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
May 23, 2026 at 4:37 pm
sulur3
தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
May 23, 2026 at 1:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?