• அரசியல்
    அரசியல்Show More
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
    vijay rahul
    விஜய் – ராகுல் கூட்டாக அளித்த உறுதி
    May 6, 2026 at 3:53 pm
    vijay eps
    விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்
    May 6, 2026 at 3:17 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
    ONLINE-POLITICAL-NEWS
    TNElection 2026 Trends & People Mindset!
    2026-05-06
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    2026-05-06
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Tokyo fish market- Tuna auction- Sushi Zanmai- Kiyoshi Kimura- Bluefin tuna- Seafood auction- Record tuna sale- Japanese fish market
    உலகம்
    இந்த மீன் விலை ரூ.28 கோடி!
    2026-01-14
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    tvk pondichery
    உலகம்
    விஜய்க்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி மக்கள்
    2025-12-11
    Sam Altman attack
    உலகம்
    AI-க்கு எதிர்ப்பு- OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் வீட்டில் தாக்குதல்!
    2026-04-12
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: யுத்தமும் சிலிண்டரும்
Share
30°C
Chennai
few clouds
30° _ 29°
79%
3 km/h
Thu
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: யுத்தமும் சிலிண்டரும்

Last updated: 2026-03-12 10:20 am
Spark Desk 47 Views
Share
gas
SHARE


அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தும், பல்லாயிரம் பேர் உடைமைகளை இழந்தும் தவிக்கின்ற நிலையில், யுத்தம் நடக்கும் இடத்துடன் எந்தத் தொடர்புமில்லாத இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பரிதவிப்பு என்பது வித்தியாசமானது. போர் நடக்கும் நாடுகளில் தங்களின் உறவினர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற பரிதவிப்பு இயல்பானது. அந்த பரிதவிப்பைவிட, தங்கள் வீட்டிற்கு சமையல் சிலிண்டர் தட்டுப்பாடின்றி சப்ளை செய்யப்படுமா என்ற பதற்றமே நாடு முழுவதும் உள்ளது.

பெட்ரோலியம் பொருட்களில் ஒன்றுதான் எல்.பி.ஜி எனப்படும் சமையல் கேஸ் ஆகும். பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியில் ஈரான் நாட்டின் பங்கு உலகளவில் முக்கியமானது. அந்நாட்டின் பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் மூலம் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் உள்ளிட்டவை அதிகளவில் உற்பத்தியாகின்றன. உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. ஈரானின் எண்ணெய் வளம்தான் அமெரிக்காவின் கண்களை உறுத்துகிறது. முஸ்லிம் நாடான ஈரானும் யூத நாடான இஸ்ரேலும் பழைய பகைமையில் உள்ள நிலையில், வல்லரசு நாடு என்ற பெயரில் அமெரிக்கா உள்ளே நுழைந்து, ஈரானின் வளங்களைத் தன் வசப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சியே இந்த யுத்தமாகும். நீ அடிக்கிறதை நிறுத்தாவிட்டால் நானும் நிறுத்தமாட்டேன் என வரிந்து கட்டி யுத்தக் களத்தில் நிற்கிறது ஈரான்.

ஈரானின் ஹார்முஸ் நீரிணைப்புதான் கேஸ் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் பிற நாடுகளுக்கு செல்வதற்கான முக்கிய பாதை. போர்ச்சூழல் ஏற்பட்டதும் ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த ஈரான் தடை விதித்ததால் பெட்ரோலியப் பொருட்கள் சப்ளை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் உலகின் பல நாடுகளும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் சூழலில் உள்ளன. இந்தியாவிலும் இந்தப் பதற்றம் அதிகமாக இருக்கிறது.

வடமாநிலங்களில் விவசாயி ஒருவர் தன்னுடைய டிராக்டரில் பெட்ரோல் பங்கிற்கு வந்து பிளாஸ்டிக் வாட்டர் டேங்க்குகளில் டீசலை நிரப்பிய காட்சி சில நாட்களுக்கு முன் வைரலானது. பல ஊர்களிலும் பெட்ரோல் பங்க் முன்பாக டூவீலர்களும் கார்களும் வரிசை கட்டி நிற்கத் தொடங்கின. பெட்ரோல், டீசல் இவற்றைத் தொடர்ந்து சமையல் கேஸ் கிடைக்குமா என்ற பதற்றமும் அதிகமானது.

ஹோட்டல் உள்ளிட்ட வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, ஈரான்-அமெரிக்கா யுத்தத்தைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையையும் உயர்த்தியது. விலை உயரும்போதே தட்டுப்பாடு அதிகரிக்கும் என்கிற மனநிலை மக்களுக்கு இருப்பதால் சமையல் கேஸ் சிலிண்டரை தங்கள் ஏஜென்சிகளிடம் பதிவு செய்வதற்கு முண்டியடித்தனர். இரண்டு சிலிண்டர்கள் உள்ள வீடுகளில் கூட, அவசர அவசரமாக புக்கிங் செய்தனர். நாளொன்றுக்கு சராசரியாக 200 சிலிண்டர்களுக்கு புக்கிங் நடக்கும் ஏஜென்சிகளில் 2000 சிலிண்டர்கள் வரை புக்கிங் கால்கள் வந்ததால், தற்போது பல ஏஜென்சிகள் புக்கிங் செய்வதையே நிறுத்திவிட்டன. இது மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் நிலையும் தட்டுப்பாடாக இருப்பதால், ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஹோட்டல் குழுமமான அன்னபூர்ணா-கௌரிசங்கர் குழுமத்தினர் தங்கள் ஹோட்டல்களில் குறிப்பிட்ட சில மெனுக்களே தயாராகின்றன. அதுவும் முக்கியமான-அத்தியாவசியமான உணவு வகைகள்தான் என அறிவிப்பே வெளியிட்டுவிட்டது. மெஸ், விடுதிகள் போன்ற இடங்களிலும் கேஸ் தட்டுப்பாட்டால் உணவு வகைகளில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. சிறிய உணவகங்கள் கேஸ் சிலிண்டருக்கு பதில் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் காட்சிகள் வெளியாகின்றன.

நடைமுறையில் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறுவது என்பது சாத்தியமில்லாதது. அது உடல்நலனுக்கு சரியானதுமல்ல. இன்டக் ஷன் ஸ்டவ் போன்ற மின் அடுப்புகள் ஓரளவு பயன்பாட்டில் இருந்தாலும், எளிய-நடுத்தர மக்களில் பெரும்பாலானவர்களின் பயன்பாட்டுக்குரியதாக இருப்பது சமையல் கேஸ்தான். முறையாகப் பதிவு செய்து, விண்ணப்பித்து, சீரான முறையில் விநியோகம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க வேண்டிய வகையில் சிலிண்டருக்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய பா.ஜ.க அரசு செய்தாக வேண்டும்.

வெங்காயம், பூண்டு விலை ஏறியபோது அது குறித்த கேள்விக்கு, “நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை” என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இப்போது சமையல் கேஸ் தட்டுப்பாட்டு நேரத்தில், எதற்காக கேஸ் சிலிண்டர், மின் அடுப்பு பயன்படுத்துங்க என்றும் விறகு அடுப்பு சமையல் எப்படி இருக்கும் தெரியுமா என்றும் அட்வைஸ்களைத் தூக்கிக் கொண்டு வரும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் யுத்தக்களத்து வெடிகுண்டுகளைவிட ஆபத்தானவர்கள்.(Online Tamil News)

TAGGED:Breaking NewsCommercial LPG ShortageEnergy CrisisFuel InflationFuel Supply DisruptionGas Price HikeGlobal Fuel CrisisHormuz StraitIndia EconomyIndia Fuel NewsIndia LPG NewsIsrael Iran ConflictLPG Cylinder ShortageMiddle East ConflictOil Export CrisisOil Supply CrisisPetrol Diesel PricesUSA Iran TensionsWorld Politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article 12.03.2026 Rasi Palan இன்றைய ராசிப்பலன்- 12.03.2026
Next Article election 2026 தமிழகத் தேர்தல் ஏப்ரல் 20க்கு பிறகா?

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ONLINE-POLITICAL-NEWS
TNElection 2026 Trends & People Mindset!
May 6, 2026 at 6:37 pm
leema
லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
May 6, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?