தமிழகத்தையே உலுக்கி எடுத்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து நிகழ்ந்து 22 ஆண்டுகள் ஆகிய ஆகும் நிலையில் ஒரு ஆச்சரிய செய்தி . அந்த தீ விபத்தில் தப்பிய மாணவி இன்று தமிழ்நாட்டின் துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.
கும்பகோணத்தில் இயங்கி வந்த கிருஷ்ணா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 16ஆம் தேதி அன்று காலை பத்து முப்பது மணி அளவில் அந்த கொடூர விபத்து நிகழ்ந்தது. பள்ளியில் ஆய்வு செய்ய சத்துணவு அதிகாரிகள் வருவதாக இருந்ததால் அன்றைக்கு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டுவதற்காக இங்கிலீஷ் மீடியம் மாணவர்களை மேல் தளத்தில் இருந்து தமிழ் மீடியம் படித்த மாணவர்களுடன் உட்கார உட்கார வைக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மீடியம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மேலே ஓலை குறை தான் இருந்தது. மதிய உணவு சமையலின்போது சமையலறையில் பரவிய தீ மலவென்று தீப்பற்றி எரியவும் கீழ்தளத்திலிருந்து மாணவ மாணவிகள் தப்பி ஓடி இருக்கிறார்கள். மேல் தளத்தில் இருந்த மாண மாணவிகளால் தப்பி ஓட முடியவில்லை.
அந்த பள்ளியில் முறையான மைதானம், வகுப்புகளில் இருந்து வெளியேறும் வசதி எதுவுமே இல்லாததால் மாணவ ,மாணவிகள் வெளியேற முடியாமல் தவித்து இருக்கிறார்கள். அதற்குள் மேலே எரிந்த கூரை மாணவ மாணவிகளின் மேல் விழுந்து தீக்கிரையானார்கள். இந்தக் கொடூர விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் . உயிரிழந்த இந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதில் இருந்து 11 வயதுக்கு உட்பட்டவர்கள்.

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்த தீ விபத்தில் தப்பித்த மாணவ, மாணவிகளின் ஒருவர் ஜெனிபர். 4ம் வகுப்பு படித்த இவர் பக்கத்து வகுப்பில் படித்த தன் தம்பியுடன் அந்த தீ விபத்தில் இருந்து தப்பித்தவர் .

கல்வியில் முன்னேற வேண்டும் என்று துடித்த ஜெனிஃபருக்கு ராதாகிருஷ்ணனின் ஐஏஎஸ் நிறைய உதவிகள் செய்து வழிகாட்டி இருக்கிறார். குடும்பத்தின் மறுமை காரணமாக இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால் ஹோம் டிவிசன் எடுத்து அதில் வந்த வருமானத்தைக் கொண்டு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வந்திருக்கிறார். ஐந்து ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் தேர்வில் மாநில அளவில் 15 வது இடம்பெற்று சாதனை படைத்திருக்கிறார் ஜெனிஃபர். இவர் மாவட்ட துணை ஆட்சியராக பொறுப்பேற்க இருக்கிறார்.

எதிர்காலத்தில் கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்து மாதிரி எந்த விபத்துகளும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் தனது வாழ்வின் முதன்மை நோக்கம் என்று சொல்கிறார் ஜெனிபர்.