[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

சிம்பு இனி உலக நாயகனா?

Spark Desk
Last updated: 2025-05-28 11:03 am
Spark Desk Spark Desk
kamalhassan simbu

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சிம்பு நடித்திருப்பதை வைத்து கமல் இடத்தை கைப்பற்றுகிறார் சிம்பு என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.  

தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இடத்திற்கு கமல் வருவதைப் போல நிஜத்திலும் சிவாஜி கணேசன் இடத்திற்கு வந்துவிட்டார் கமல்.   அது மாதிரியே தக் லைஃப்பில் கமல் இடத்திற்கு வரும் சிம்பு அந்த  இடத்தை நிஜத்திலும் தக்க வைக்கிறார் என்று அவரது ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

கமல்ஹாசனும் கூட தன் தோளில் ஏறி, தோளினை படிக்கட்டுகளாகக் கொண்டு மேலே ஏறிச்செல்லுங்கள் என்று இளைய தலைமுறையினை ஊக்குவித்துள்ளார்.

இதற்கு தக் லைஃப் விழா மேடையில் பேசிய சிம்பு,  ‘’நாங்கள் உங்கள் தோளை படிக்கட்டுகளாக அல்லாமல் ஏணிப்படிகளாக எண்ணி மிதித்துச் செல்லாமல் மதித்துச்செல்வோம்’’என்றார்.

’’நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது’’ என்று சொன்ன சிம்பு,  ‘’ தேவர் மகனில் நடித்ததால் கமல் சாருக்கு இந்த இடம் கிடைக்கல.  அவர் ஏற்று நடித்திராத பாத்திரம் இல்ல.  அவருக்கு நிகர் அவர்தான்.  அவர் பெருந்தன்மையோடு என்னை தன்னுடன் நடிக்க வச்சிருக்கார்.  அதற்காக அவர் இடத்திற்கு நான் வந்துவிட்டதாக சொல்வது சரியல்ல’’என்று தெளிவாகச் சொன்னார்.

தன் இடத்தை சிம்புவுக்கு கொடுத்துவிட்டார் கமல் என்றும், கமல் இடத்திற்கு சிம்பு வருகிறார் என்றும் ரசிகர்கள் பரப்பி வரும் நிலையில், ’உலக நாயகன் சிம்பு’ என்று பிரச்சாரம் செய்கிறார் நடிகர் கூல் சுரேஷ்.

தக் லைஃப் படத்தில் ’விண்வெளி நாயகன்’ என்று கமல்ஹாசன் புகழப்படுவதாலும், உலக நாயகன் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கமல் கேட்டுக்கொண்டிருப்பதாலும் அந்த ‘உலக நாயகன்’ பட்டத்தை சிம்புவுக்குச் சூடி அழகு பார்க்கிறார் கூல் சுரேஷ்.

’பரமசிவன் பாத்திமா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, ‘’இனிமேல் சிம்புதான் உலக நாயகன், கமல் சார் விண்வெளி நாயகன்’’ என்றார்.

TAGGED:kamalhassansimbustrtamilnaduthuglifethuglife audio lanch
Previous Article keneeshaa ravimohan கெனிஷாவை கதற வைத்த அந்த போன் கால்
Next Article kamalhasan speech கன்னடர்களின் சுயமரியாதையை அழித்துவிட்டாரா கமல்? ஏன் கொந்தளிக்கிறது கர்நாடகம்?
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account