• அரசியல்
    அரசியல்Show More
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
    vijay rahul
    விஜய் – ராகுல் கூட்டாக அளித்த உறுதி
    May 6, 2026 at 3:53 pm
    vijay eps
    விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்
    May 6, 2026 at 3:17 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
    ONLINE-POLITICAL-NEWS
    TNElection 2026 Trends & People Mindset!
    2026-05-06
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    2026-05-06
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Iran school airstrike
    உலகம்
    ஈரான் பள்ளி மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்வு
    2026-03-02
    Gaddafi son killed -Online Tamil News
    உலகம்
    லிபியாவில் மர்ம துப்பாக்கிச் சூடு – கடாபியின் மகன் உயிரிழப்பு !
    2026-02-04
    Online Tamil News
    உலகம்
    நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு 7.5 ஆண்டுகள் சிறை : காரணம் என்ன?
    2026-02-09
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: தேசிய இயக்கத்தின் தமிழ் முகம்
Share
33°C
Chennai
scattered clouds
33° _ 32°
66%
3 km/h
Thu
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: தேசிய இயக்கத்தின் தமிழ் முகம்

Last updated: 2025-04-10 6:33 am
Spark Desk 128 Views
Share
Veteran Congress leader Kumari Ananthan dies at the age of 92
SHARE

காமராஜரிடம் அரசியல் பயின்றார். காந்திய வழியில் நடந்தார். கன்னியாகுமரி முதல் சென்னை வரை மட்டுமின்றி, வடமாநிலங்களிலும் அவர் பாதம் படாத பகுதிகள் இல்லை என்கிற அளவில் நடந்தே சென்றார். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியின் தலைவராகப் பல நிலைகளுக்கு உயர்ந்தார். எந்த நிலையும் இல்லாவிட்டாலும் தமிழின் குரலாக ஒலித்தார். அரசியலில் இனி பார்க்க முடியாத அபூர்வ மனிதர்களில் ஒருவர், குமரிஅனந்தன்.

பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவரும் தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜனின் அப்பா என்றுதான் அவருடைய மரணத்தின்போது அடையாளம் காட்டப்படுகிறது. குமரிஅனந்தனோ பாரதிய ஜனதா கட்சியின் மதவாதத்திற்கு நேரெதிரான காந்தியவாதி. காமராஜரின் உண்மைத் தொண்டர். ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் காமராஜருடன் இணைந்து நின்று, காமராஜர் மறைவுக்குப் பிறகு, ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றவர். இந்திரா காங்கிரஸை தோற்கடித்து ஜனதா (ஸ்தாபன காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி) ஆட்சி நடைபெற்ற போது, நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். ஏழை எளிய மக்கள் தங்கள் சொந்தங்களுக்கு பணம் அனுப்பப் பயன்படுத்தும் மணியார்டர் படிவத்தில் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், தமிழில் அதனை வெளியிடச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நிறைவேறிடச் செய்த பெருமை குமரி அனந்தன் அவர்களுக்கு உண்டு.

ஜனதாவிலிருந்து விலகி காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களம் கண்டவர். சட்டமன்றத்திலும் அழகிய-இனிய தமிழில் அவரது குரல் ஒலித்தது. தமிழ்நாட்டு அரசியலில் எதிர்துருவங்களான எம்.ஜி.ஆர்-கலைஞர் கருணாநிதி இருவரிடமும் சம அளவிலான நட்புடன் இருந்ததுடன், தன் மகள் திருமணத்தில் இருவரையும் ஒரே மேடையில் பங்கேற்க வைத்து அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் குமரி அனந்தன். பின்னர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதன் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அரசியல் சூழல்களைப் புரிந்து கொள்ளாமல் சுழல்களில் அவர் சிக்கிக்கொண்ட 1996 நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தல், கடினமான அனுபவத்தை அவருக்குத் தந்தது. அரசியலில் கிடைத்த வெற்றி-தோல்விகளைக் கடந்து அவர் எப்போதும் தமிழ் மீது தணியாத காதல் கொண்டவராகவே இருந்தார். இலக்கியச் செல்வர் என்று அனைத்துக் கட்சியினரும் அவரை அன்புடன் குறிப்பிடும் அளவிற்கு அவருடைய தமிழார்வமும், சொற்பொழிவும் அமைந்திருந்தன.

பொதுவாக, மேடையில் பேசுபவர்கள் நிகழ்ச்சி அழைப்பிதழில் உள்ள அத்தனை பெயர்களையும் படிக்கும்போது, எதிரில் இருப்பவர்கள் கொஞ்சம் களைப்படைவார்கள். ஆனால், குமரி அனந்தன் அந்தப் பெயர்களைக்கூட தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் பக்தி இலக்கியங்களின் இசை நயத்துடன் படித்து, பார்வையாளர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்துவார். உவமைகளுடனான அவருடைய சொற்பொழிவுகள் மாற்றுக் கட்சியினரையும் மெய்மறந்து கேட்கச் செய்யும் வலிமை கொண்டவை. 1990களின் முற்பகுதியில் அக்னி என்ற அமைப்பு நடத்திய தற்காலை-இடைக்கால-சங்ககாலத் தமிழ் என்ற மூன்று நாள் கருத்தரங்கில், இடைக்காலத் தமிழ் என்ற தலைப்பில் பக்தி இலக்கியங்களின் சாரத்தை சுவைபடப் பொழிந்தவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன். அவர் பேசிய அடுத்த நாள், சங்கத் தமிழ் என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதி உரையாற்றினார். அரசியலில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் இருவரையும் தமிழ் இணைத்திருந்தது.

1989-91 ஆட்சிக்காலத்தில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் துணைத்தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வாதங்களில் அனல் பறந்தாலும் அதில் தமிழ் எனும் குளிர்தென்றல் வீசிக்கொண்டே இருக்கும். காந்திய கொள்கைகளான மதுவிலக்கு, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக பல ஆயிரம் மைல்கள் நடைப்பயணம் மேற்கொண்டவர் குமரி அனந்தன். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது முழுமையான மதுவிலக்கு என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அளிப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் குமரி அனந்தன்.

தன்னைப் பற்றியான விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் அரசியல் வழிகாட்டிகளானத் தலைவர்கள் வகுத்த பாதையில் தொடர்ந்து நடந்தவர் அவர். தமிழும் தேசியமும் அவரது இரு கண்களாக இருந்தன. மாற்றுக் கட்சியினரும் மதித்துப் போற்றும் பண்பாளராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை குமரி அனந்தனுக்கு வழங்கிச் சிறப்பித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆடம்பரமயமாகிவிட்ட அரசியலில் குமரி அனந்தன் போன்றவர்கள் எப்போதுமே ஆச்சரியம்தான்.

TAGGED:Congresskumari anandantamilTamil Nadutamilisai soundararajan
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article phone copy ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரிப்பு! நம்பர் 1 நிறுவனம் எது தெரியுமா?
Next Article anbumani ramadoss அன்புமணிக்கே எதிராக திரும்பிய அம்பு!

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ONLINE-POLITICAL-NEWS
TNElection 2026 Trends & People Mindset!
May 6, 2026 at 6:37 pm
leema
லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
May 6, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?