தவெக ஆட்சி அமைந்த பின்னர் முதன்முறையாக முதல்வர் விஜய் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார் விஜய்.
நேரமில்லை என்பதை காரணம் காட்டி குடியரசுத்தலைவர், அமித்ஷா, ராகுல்காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்டோர் விஜய்யை சந்திக்க மறுத்துவிட்டனர். இதனால் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் சந்தித்து பேசினார் விஜய்.

வெறும் 7 நிமிடங்கள் மட்டும் ஒதுக்கினார் மோடி. அமித்ஷாவோ அந்த 7 நிமிடங்கள் கூட ஒதுக்கவில்லை. அந்த 7 நிமிட சந்திப்பிலும் கூட வெறும் 4 கோரிக்கைகளை மட்டுமே முன் வைத்திருக்கிறார் விஜய். இதற்கு முன்பு பிரதரை சந்தித்த முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் 63 கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார். ஜெயலலிதாவோ 29 கோரிக்கைகள் முன் வைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியோ 23 கோரிக்கைகள் முன்வைத்திருக்கிறார். ஆனால் விஜய்யோ வெறும் 4 கோரிக்கைகள் மட்டும் முன் வைத்திருக்கிறார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
கூட்டணியில் இருக்கும் ராகுல்காந்தி கூட சந்திக்காதது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு, விஜய்யும் ராகுலும் சந்திக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிக்கவில்லையே என்று சமாளிக்கிறார். உண்மை என்னவோ?
முதல் பயணம் தோல்வியில் முடிந்ததால் அடுத்த டெல்லி பயணம் ஜூன் 2வதுது அமையவிருக்கிறது.



