அன்றைக்கு மூன்று நிமிசம் பியூஷ் கோயலை சந்திக்க பன்னீர் செல்வத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றைக்கு அவரை என்.டி.ஏவுக்குள் இழுக்கிறது பாஜக டெல்லி மேலிடம்.
‘’நானே வந்துவிட்டேன் இன்னும் ஏன் பன்னீர்செல்வம் தயங்குகிறார்?’’ என்று நேற்று கேட்ட டிடிவி தினகரன், இன்றைக்கு, ‘’பன்னீர்செல்வத்திற்கும் பழனிசாமிக்கும் இடையே சட்டச்சிக்கல் இருக்கிறது. அதனால்தான் பன்னீர்செல்வம் அதிமுக கூட்டணியில் வர முடியாத நிலை இருக்கிறது என்று சொன்னார்.

என்ன சட்டச்சிக்கல் இருந்தால் பரவாயில்லை என்று கூட்டணியின் பலத்தை அதிகரிக்க நினைத்த பாஜக மேலிடம் பன்னீர்செல்வத்தை என்.டி.ஏவுக்குள் இழுக்கிறது. கூட்டணியில் மூன்று இடம் தருவதாக சொல்ல, மூன்று முறை தான் போட்டியிட்ட போடி தொகுதியிலேயே நிற்க பன்னீர்செல்வமும் முடிவெடுத்திருக்கிறார்.
அதிமுக கதவடைப்பு செய்த பின்னர், என்.டி.ஏவும் கை விரித்த பின்னர் திமுக மற்றும் தவெக கதவுகள் திறந்திருந்ததால் அக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் பன்னீர்செல்வம். இரண்டு தினங்களுக்குள் திமுகவா? தவெகவா? என்று குழப்பத்தில் இருந்தவரை, கடைசி நேரத்தில் திமுக , தவெக வேண்டாம் என்று முடிவெடுக்க வைத்திருக்கிறது பாஜக டெல்லி மேலிடம்.



