ஓ மை கடவுளே, டிராகன் படங்களைத் தொடர்ந்து தர்மன் படத்தை இயக்குகிறார் அஸ்வத் மாரிமுத்து. கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்கிறார். ரஜினி நடித்த தர்மதுரை படத்தில் அவரின் கேரக்டர் பெயர் தர்மன் அதையே ரஜினி நடிக்கும் 173 வது படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தருமன் பட விழாவில் படம் குறித்து பேசினார் அஸ்வத் மாரிமுத்து. ’’ரஜினி சாரை சந்திப்பதில் எனக்கு அச்சமில்லை. ஆனால் கமல் சாரை சந்திப்பதில் அச்சம் இருந்தது. அவர் என்ன கேட்பாரோ எந்த படத்தை பற்றி பேசுவார் என்ற அச்சம் இருந்தது. ஆனால் கமல் சாரை சந்தித்தபோது ஒன்னே ஒன்று தான் சொன்னார். நான் ரஜினி ரசிகன். நீங்கள் ரஜினி படம் கொடுத்தால் போதும் என்று சொன்னார்.
ரஜினி சாரை சந்தித்து விட்டு திரும்பிய போது ஒரு வாய்ஸ் நோட் அனுப்பினார். நாம் கமலுக்கு படம் பண்ணுகிறோம். அதனால் கரெக்டாக பண்ண வேண்டும். ஜெயிச்சே ஆக வேண்டும் என்று சொன்னார். கமல் சாரும் ரஜினி சாரும் 50 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார்கள். ஆனாலும் ஜெயிச்சே ஆக வேண்டும் என்று முதல் பட நடிகர் போலவே இன்னமும் அதே வேகத்தோடு இயங்கி வருகிறார்கள்.

நான் ரஜினி சாருக்கு இரவு 11 மணிக்கு எல்லாம் போன் செய்வேன் ஹலோ சார் என்று மெசேஜ் போட்டால் போதும் லைனில் வந்துவிடுவார். கதை பற்றி விவாதிப்போம். நான் இந்த படத்தில் ஒரு அசோசியேட் டைரக்டராக இருக்கிறேன் அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் அவற்றை வைத்துக் கொள்வதும் வைத்துக் கொள்ளாததும் உங்கள் விருப்பம் என்று சொன்னார். பேச்சுக்குத்தான் அசோசியேட் டைரக்டர் என்று சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே படத்தின் கதையில் அவ்வளவு உழைத்திருக்கிறார் ரஜினி சார் .
இந்த படத்தை பற்றி ஒரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது. அதாவது ஐந்து ரூபாய் டாக்டரின் கதை தான் தர்மன் படம் என்று ஒரு தகவல் உலவி கொண்டிருக்கிறது. இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினி சார் நடித்த படங்களில் நமக்கு பிடித்தது படையப்பா. அதேபோன்று கமல் சார் படங்களில் எனக்கு பிடித்தது வேட்டையாடு விளையாடு. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் .ஆமா இந்த இரண்டு படங்களின் கலவையாகத் தான் தர்மன் படம் இருக்கும். இது ஒரு ஜெனரஞ்சகமான திரில்லர் படம்’’



