[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்

T.R.Kathiravan
Last updated: 2026-06-24 1:37 pm
T.R.Kathiravan T.R.Kathiravan

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக முடிவானதும் முதலில் இப்படத்திற்காக அழைத்துப் பேசப்பட்ட இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார்.  அவர் சொன்ன கதையில் திருப்தி அடையாத ரஜினியும் கமலும் வேறு பலரிடமும் கதை கேட்டு வந்த போது தான் இயக்குநர் சுந்தர்- சி இவர்களின் வட்டத்திற்குள் வந்தார்.

 சுந்தர் -சி சொன்ன காமெடியான பேய் படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டார்.  அந்த கதையில் சில திருத்தங்களை சொல்லி அதை சரி செய்ய சொல்லி இருந்தார் ரஜினி.  திரும்பத் திரும்ப அது போன்று திருத்தங்கள் வந்து கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த சுந்தர்- சி அப்படத்தில் இருந்து விலகினார். 

 அதன் பின்னர் ரஜினியின் 173 ஆவது படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவதாக அறிவிக்கப்பட்டார்.  இந்த படம் ஓர் இரவில் நடக்கும் திரில்லர் படம் என்று சொல்லப்பட்டது.  இப்படத்தில் ரஜினிகாந்த் தையல் கடைக்காரர் போல 1956இல் கதை நடப்பது போன்று எடுக்கப்படுவதாக இருந்தது என்று கூறப்பட்டது. 

2022-ல் வெளிவந்த தி அவுட் பிட் என்னும் ஹாலிவுட் சினிமாவின் தழுவல்தான் இப்படம் என்றும் கூறப்பட்டது.  படத்தின் போஸ்டர் டிசைன் எல்லாம் வெளியான நிலையில் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை ரொம்ப சென்சிட்டிவான கதை . அதில் நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கிறது என்பதால் அப்படத்தை தற்போதைக்கு தள்ளி வைத்தார்கள் ரஜினியும் கமலும்.

 இதன் பின்னர் தான் அஸ்வத் மாரிமுத்து கதையை டிக் செய்தார்கள் ரஜினியும் கமலும்.  இப்படத்திற்கு ’தர்மம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு த்ரில்லர் கதை. இப்படத்தில் டாக்டராக நடிக்கிறார் ரஜினி. பேட்ட படத்திற்கு சிம்ரன் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன் ’தர்மமே வெல்லும்’ என்று அறிவித்துள்ளார்.

TAGGED:dharmandharman rajiniKamal Haasanonline tamil newsrajinirajinikanthtamil news todaytamilnaduthalaivar173ரஜினி
Previous Article விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
Next Article நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account