• அரசியல்
    அரசியல்Show More
    four paints
    பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
    May 5, 2026 at 4:59 pm
    vijay ponraj
    விஜய் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி! 
    May 5, 2026 at 1:51 pm
    vijay sad
    பதில் அளித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் விஜய் – கி.வீரமணி
    May 5, 2026 at 1:30 pm
    sa
     திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
    May 5, 2026 at 12:27 pm
    vijay car
    விஜய் கைக்கு சென்ற பேப்பர் – கடுப்பில் ஆஸி பயணம்
    Apr 26, 2026 at 11:30 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    four paints
    பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
    2026-05-05
    China fireworks explosion,
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    online-political-news
    Tamil Nadu Assembly Election Result 2026!
    2026-05-05
    sa
     திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
    2026-05-05
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Myanmar News-Independence Day Amnesty-Prisoners Released-Political Prisoners-Human Rights
    உலகம்
    மியான்மரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !
    2026-01-14
    Elon Musk, SpaceX, satellites, orbital network, Starlink, AI, Online Tamil News
    உலகம்
    விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !
    2026-02-02
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : சட்ட நீதியா? சனாதன தர்மமா?
Share
30°C
Chennai
mist
31° _ 30°
80%
6 km/h
Tue
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : சட்ட நீதியா? சனாதன தர்மமா?

Last updated: 2026-01-27 10:00 am
Spark Desk 75 Views
Share
Sanatana Dharma debate India-Online Tamil News
SHARE


இந்தியா தனது குடியரசு நாளைப் பெருமையுடன் கொண்டாடியிருக்கிறது. செங்கோட்டை முதல் சின்னச் சின்னப் பள்ளிக்கூடங்கள் வரை மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. கொடியேற்றுவதும், அணிவகுப்புகள் நடத்துவதும், விருதுகள் வழங்குவதும், தேநீர் விருந்து வைப்பதும் குடியரசு நாளின் சிறப்பு நிகழ்வுகளாக அமைகின்றன. ஆனால், குடியரசு என்பதன் நோக்கம் அவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மைகள் காக்கப்பட வேண்டும் என்பதுதான் குடியரசு நாளின் முக்கிய நோக்கமாகும்.

நம் இந்தியா என்பது இறையான்மைமிக்க மதச்சார்பற்ற சமத்துவ நோக்கம் கொண்ட ஜனநாயகக் குடியரசு நாடாகும். இதன் சிறப்பே பல மொழிகள், இனங்கள், மதங்கள், பண்பாடுகளைக் கொண்ட மக்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மைதான். வேற்றுமையில் ஒற்றுமை என்று இது வலியுறுத்தப்படுகிறது. அதற்கு மாறாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு என்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானப் போக்கையே மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியில் கல்வித்துறை, நிர்வாகத்துறை எனப் பல துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையில் பிடிப்புள்ளவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதனால் பல மதங்கள், பல மொழிகள், பல இனங்கள் என்கிற பன்மைத்துவத்திற்குப் பதில், இந்து-இந்தி-சமஸ்கிருத வேதம் இவையே இந்தியா என்பதைப் போன்ற தோற்றம் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கொள்கைகளை விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் Anti Indian, urban naxal என்று முத்திரை குத்துவதைப் பா.ஜ.க.வினர் தொடர்ந்து வன்மத்துடன் கடைப்பிடிக்கிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த எண்ணம் நீதித்துறையிலும் சிலரால் வெளிப்படுத்தப்படுகிறது. திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதியரசர், அந்தத் தீர்ப்பை மாநில அரசு நடைமுறைப்படுத்தாததால், பொதுவெளியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதைக் காண முடிகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக எங்கே தீபம் ஏற்றப்படுகிறதோ அதே மரபைக் கடைப்பிடிக்கிறோம் என்கிறது மாநில அரசு. தனி நீதிபதி தீர்ப்பை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வும் தீர்ப்பளித்துள்ள நிலையில், மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடுகிறது. இறுதியில், உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அந்தத் தீர்ப்பே நடைமுறைப்படுத்தப்படும். இந்த சட்ட வாய்ப்புகளை நமது அரசியலமைப்புச் சட்டங்களும், நீதிமன்ற நடைமுறைகளும் வழங்கியுள்ளன.

தீபத்தூண் எனச் சொல்லப்படும் இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதி, அது நிறைவேறவில்லை என்பதால், அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் அதே போன்ற வடிவமைப்பில் தீபம் ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி, தன்னுடைய நீதிபதி பதவிக்காலம் முடிவடையும்வரை தன் இதயத்தி சனாதன தர்மத்தை ஏந்தி செயல்படுவேன் என்றும் ஒரு நிகழ்வில் உரையாற்றியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியபோது, டெங்கு-மலேரியா ஆகியவை போல ஒழிக்கப்பட வேண்டியது சனாதனம் என்று கூறினார். பா.ஜ.க. தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. உதயநிதியின் தலையை சீவுவேன் என்று வடநாட்டு சாமியார் ஒருவர் சொன்னார்.(Online Tamil News)

உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி கருத்து தெரிவித்த பா.ஜ.க அமித் மாளவியா என்பவர், “இந்து மதத்தின் சனாதனத்தைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை ஒழிப்பதாக உதயநிதி பேசியுள்ளார். இது இனப்படுகொலையைத் தூண்டுவதாகும்” என்றார். பா.ஜ.க. தலைவரின் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது என காவல்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஒருவர், பா.ஜ.க. தலைவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ததுடன், சனாதன ஒழிப்பு என்பது அதைப் பின்பற்றக்கூடியவர்கள் மீதான இனப்படுகொலை அல்லது பன்பாட்டு அழிப்பு என்பதையே குறிக்கும் எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், நீதிபதியின் விளக்கம் அபத்தமானது என்று கண்டனமும் மறுப்பும் தெரிவித்துள்ளார்.

சனாதனம் என்பது மதமா? இந்து மதத்தில் உள்ளவர்கள் அத்தனை பேரும் சனாதனத்தைக் கடைப்பிடிக்கிறார்களா? அத்தனை பேருக்கும் சமமான நீதியை சனாதனம் ஏற்றத்தாழ்வின்றி வழங்குகிறதா? திராவிடத்தை ஒழிப்போம் என்று பா.ஜ.க.வும் அவர்களின் திடீர் தோஸ்தான சீமானும் பேசுகிறார்களே, அப்படியென்றால் திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றுவர்களைக் கொல்வோம் என்றுதான் அவர்கள் சொல்கிறார்களா?

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் அவரவர் மதம் சார்ந்த கொள்கையைப் பின்பற்றுவதற்கும், ஏற்றத்தாழ்வுகளை விமர்சிப்பதற்கும் உரிமை உண்டு. எல்லாவற்றுக்கும் மேலானது அரசியலமைப்புச் சட்டம். அதன் வழியிலான சட்டநீதிதான் ஆட்சி செய்ய வேண்டும். சனாதன தர்மம் அல்ல.

TAGGED:BJPDravidian PoliticsIndian ConstitutionJudiciaryonline tamil newsPluralismRepublic of IndiaRSSRule of LawSanatana DharmaSecularismtamil news
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Today Rasi Palan-Online Tamil News இன்றைய ராசிப்பலன் – 27.01.2026
Next Article Jananayagan- censor issue- Online Tamil News அடுத்தடுத்து விழும் அடிகள்: தள்ளிப்போகும் ஜனநாயகன் வெளியீடு !

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

four paints
பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
May 5, 2026 at 4:59 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?