விஜய்க்கு சொந்தமாக 7 வீடுகள் இருக்கும் நிலையில் அவரது கனவு இல்லத்தை கேட்கிறார் சங்கீதா.
விஜய் நடிக்க வருவதற்கு முன்பாகவே அவரது தந்தை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சாலிக்கிராமத்தில் 2 வீடுகள் இருந்தன. இந்த ஒரு வீட்டில் தான் தாய், தந்தை, பாட்டியுடன் விஜய் வசித்து வந்தார். இன்னொரு வீடு அலுவலகமாக இயங்கி வருகிறது.
விஜய் ஹீரோ ஆகி முன்னணி நடிகராக ஆன பின்னர் இந்த அலுவலகம் விஜய் ரசிகர் மன்றமாக இயங்கி வந்தது.

திருமணத்திற்கு பின்னர் வசூல் மன்னனாக விஜய் உயர்ந்தபோது திருவான்மியூரில் புது வீடு கட்டி அதில் சங்கீதாவுடன் தனிக்குடித்தனம் சென்றார் விஜய். அடுத்தடுத்து வசூல் சக்கரவர்த்தியாக நின்று நீலாங்கரையில் தனது புது வீடு கட்டி அங்கு குடியேறினார். இது விஜய்யின் கனவு இல்லம். ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பீச் ஹவுஸ் பார்த்துவிட்டு இதே மாதிரி பங்களா கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு நீலாங்கரையில் நீச்சல்குளம், உடற்பயிற்சி கூட வசதிகளுடன் கடற்கரை மாளிகையை கட்டினார் விஜய்.
இந்த வீட்டில் விஜய் மனைவி, குழந்தைகளுடன் குடியேறிய பிறகு திருவான்மியூர் வீட்டில் சந்திரசேகரும், ஷோபாவும் வசித்து வருகின்றனர்.

கேரியரின் உச்சத்திற்கு சென்றபின்னர் பனையூரில் ஒரு பங்களா கட்டினார் விஜய். இதில் இப்போது கட்சி தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
சாலிக்கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவரது ஊழியர்கள் பலர் வாடகை இன்றி வசித்து வருகின்றனர்.
பட்டினப்பாக்கத்திலும் ஒரு வீடு வாங்கி இருக்கிறார் விஜய். இது தவிர சென்னையின் பல இடங்களில் விஜய்க்கு திருமண மண்டபங்கள் உள்ளன.

நடிகையுடன் விஜய் கள்ள உறவு வைத்திருந்ததால் கணவருடன் கோபப்பட்டு லண்டனில் வசித்து வந்தார் சங்கீதா. அங்கே தன் மகளை படிக்க வைத்து வருகிறார். சந்திரசேகர் – ஷோபா முயற்சியில் நீலாங்கரை வீட்டிற்கு வந்து வசித்தார் சங்கீதா. ஒரே வீட்டில் வசித்தும் விஜய்யும் சங்கீதாம் ஒற்றுமையாகவில்லை. இதனால் பழையபடியே லண்டனுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நடிகையுடன் விஜய் இருப்பது மாதிரியான போட்டோக்கள் அடிக்கடி வெளியானதால் பரஸ்பரமாக பேசி பிரிந்து விடலாம் என்று விஜய்யிடம் பேசி இருக்கிறார் சங்கீதா. அதற்கு விஜய் ஒத்து வராததால் , தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சத்துடன் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார் சங்கீதா.

இந்த வழக்கு முடியும் வரையிலும் சென்னையில் தங்கி இருக்க தனக்கு வீடு வேண்டும் என்பதால், நீலாங்கரை வீட்டில் தன்னை தங்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார் சங்கீதா.
ஜீவனாம்சத்தில் விஜய்யின் கனவு இல்லம் தனக்கு வேண்டும் என்று சங்கீதா விரும்புவதாக தகவல்.



