அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் APMMK எனும் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார் சசிகலா. கடந்த மாதத்திலேயே கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி இருந்த சசிகலா இன்று கட்சியின் பெயரை அறிவித்துள்ளர்.
தனது கட்சியின் சின்னம் ‘தென்னந்தோப்பு’ என்றும் அறிவித்திருக்கிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடப்போவதாகவும், ஒத்த கருத்துடைய கட்சிகளோடு இணைந்து போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நான் தனிமரமாக வரவில்லை. தோப்பாக வந்திருக்கிறேன் என்பதை உணர்த்து வதற்காகத்தான் தென்னந்தோப்பு சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளேன் என்கிறார் சசிகலா.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. அப்படி இருந்தும் கட்சியின் பெயரில் தன் தோழி ஜெயலலிதாவின் பெயரை தவிர்த்துவிட்டு அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பெயருக்கான அடைமொழி புரட்சித்தலைவர் என்று வைத்தது ஏன்? என்ற கேள்விக்கு, தொண்டர் தொடங்கிய கட்சியில் நான் இணைந்துள்ளேன் என்று சொல்கிறார் சசிகலா.

அவர் ஏன் அப்படிச் சொல்கிறார்? பி.சக்கரவர்த்தி என்பவர் கடந்த 2016ல் தொடங்கிய கட்சிதான் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம். இந்த கட்சியைத்தான் இப்போது சசிகலா தன் வசமாக்கி இருக்கிறார்.



