தேர்தலில் நாதகவின் கொள்கை திட்டங்களை ஸ்கிரீனில் காட்டி விளக்கம் அளித்து தீவிர பிரச்சாரம் செய்தார் சீமான். இத்தனை முயற்சி செய்தும் மக்கள் படுதோல்வி அடையச் செய்துவிட்டதால், தவெகவை ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்துவிட்டதால் ஆவேசம் அடைந்து மறைமலைநகர் நாதக கூட்டத்தில் வெடித்தார்.
’’நான் பேசுவது வேடிக்கையாக தெரிகிறது. வேடிக்கை காட்டியவன் தலைவனாக தெரிகிறான். அவர்களுக்கு தேவை கருத்தல்ல, வெறும் கவர்ச்சி. யார் வேட்பாளர் என்று தெரியாது. என்ன சொல்கிறார்கள் என்றும் தெரியாது. எதுக்கு போடுகிறோம் ஏன் போடுகிறோம் ஓட்டு என்று ஒருவருக்கும் தெரியாது. இவர்தான் வேட்பாளரா? வெளங்கிடும்டா நாடு.
மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ், சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், புத்தர் , அம்பேத்கர், மகாகவி பாரதி எல்லாம் தேவையில்ல.

என்னை தோற்கடித்து தோற்கடித்து நீ தோற்றுப்போவாய். கடைசியாக நான் வென்று முடிப்பேன். ஏன்.. நான் காலத்தின் மகன். பொறுமையாக இருந்து வென்று காட்டுவேன். அதனால் இனி எவனிடத்திலும் பேச்சு கிடையாது. பேசியாச்சு… பேசியாச்சு… இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவிற்கு பேசியாச்சு. காற்று, மரம், மலை, கொடி, அருவி எல்லாவற்றையும் பேசியாச்சு. உனக்கு நக்கலாகவும் நகைச்சுவையாகவும் இருக்குல்ல..ஒருநாள்… ஒருநாள் நீ என்னை தேடுவ…கஷ்டம் வரும்போதுதான நீ கோவிலுக்கு போவ..ஒருநாள் என் கோயிலுக்கு வருவ நீ…நீ வருவ.. எதுவும் மாறாது. மாற்றுவதற்கு என்னையும் என் பிள்ளைகளையும் தவிர யாராலும் முடியாது.
எந்த போராட்டத்திற்கும் இனி என்னை கூப்பிடாதீங்க, வரமாட்டேன். போ போ.. உனக்குத்தான் ஒரு கஷ்டமும் வராதே. நீதான் கடவுளின் ஆட்சியை நிறுவி இருக்குறீயே… எதாவது ஒரு பிரச்சனை வந்து என் வீட்டுக்கு மனு கொடுக்க வா. அன்னைக்கு பார்ப்ப. இப்ப மாதிரி சிரிச்சிக்கிட்டு இருக்குற சீமான் இருக்க மாட்டேன். சேட்ட உனக்கு. என்ன சொல்றோம் ஏதும் சொல்றோம்னு கேட்க முடியல.

நான் நிறைய பாடம் நடத்துனேன். எனக்கு மக்கள் நடத்துன பாடம் இருக்குல்ல.. படிக்க முடியல..திணறிட்டேன். மக்கள் ஒருபோதும் அறிவுத்தளத்தை தேட மாட்டார்கள்; கவர்ச்சியைத்தான் தேடுவார்கள் என்று அப்போதே ஹிட்லர் சொல்லி இருக்கிறார்.
என் பேத்தி சொல்லிச்சு போட்டேன் என்று சொல்கிறார். பேத்தி சொன்னா குவார்ட்டர் வாங்கி கொடுத்திடுவீயா
கடந்த 15 வருசமா எவ்வளவு பேசியிருப்பேன். எதுவும் பயனில்ல. எல்லாம் பாதிக்கப்பட்டு என்னைத்தேடி வருவான். நான் வேற நாட்டுல போய் படுத்துக்குவேன். கீரை ஆகும் கீரைச்சாறு ஆகாதுங்கிற மாதிரி திமுக ஆகாது . ஆனால் திமுகவால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் மட்டும் வேணுமா? காலக்கொடுமை. எப்பவும் போதிக்கும்போது தெரியாது. பாதிக்கும்பொதுதான் தெரியும். பச்சைமட்டை வைத்தியம் இருக்கு.’’



