• அரசியல்
    அரசியல்Show More
    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    May 9, 2026 at 6:31 pm
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    May 9, 2026 at 4:23 pm
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-09.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-08.05.2026
    2026-05-09
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    ghanaian-Ebo Nova-fraud-Prophet-God-postponed-The end of the world
    உலகம்
    “உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
    2025-12-26
    New-reed-snake-specie-founded-sceintists-sciencenews-technology
    உலகம்
    15 வருடங்களுக்கு அறியப்பட்ட பாம்பின் இனம்!
    2026-01-14
    Jaahnavi Kandula -Online Tamil News
    உலகம்
    அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு ரூ.262 கோடி இழப்பீடு !
    2026-02-12
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: செங்கோட்டையன் கோபத்திற்கு இதுதான் காரணமா? 
Share
28°C
Chennai
mist
28° _ 27°
89%
2 km/h
Sun
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

செங்கோட்டையன் கோபத்திற்கு இதுதான் காரணமா? 

Last updated: 2025-02-27 12:00 pm
Spark Desk 160 Views
Share
Sengottaiyan Edappadi ADMK Tamil Nadu
File Pic
SHARE

அதிமுக மேலும் உடைகிறதா? என்ற அதிர்வுகளை எழுப்பி இருக்கின்றனர் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா.  பாஜகவுடன் இபிஎஸ் கைகோர்த்ததுதான்  இந்த கோபத்திற்கும் காரணம் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை கொண்டு வர கடந்த 2011ஆம் ஆண்டில் ரூ.3.72 கோடி நிதியளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.  எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.  

இதற்காக அதிக்கடவு – அவிநாசி திட்ட கூட்டமைப்பு, பொதுமக்கள், விவசாயிகள் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கோவை மாவட்டத்தில் அன்னூர் அடுத்த கஞ்சப்பள்ளியில் பாராட்டு விழா எடுத்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த இந்த பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் புறக்கணித்தது அக்கட்சிக்குள் பெரும் புயலை எழுப்பியது.

sengottaiyan

கட்சிக்குள் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று தலைமை மீது அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் செங்கோட்டையனின் இந்த புறக்கணிப்பு தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓபிஎஸ்சிடம் இருந்து பிடுங்கிய முதல்வர் நாற்காலியை யாருக்கு கொடுப்பது? என்று நடந்த கூவத்தூர் ஆலோசனையில் செங்கோட்டையன் பெயரே பட்டியலில் முதலில் இருந்திருக்கிறது.  அந்த நேரத்தில் அவர்கள் கேட்ட கப்பத்தை கட்ட வழி இல்லை என்று செங்கோட்டையன் சொன்னதால், அந்த நேரத்தில் அவர்கள் கேட்ட கப்பத்தை  தன் சகாக்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மூலமாக கட்டிவிட்டு முதல்வர் நாற்காலியை வாங்கிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி என்று பலரும் சொல்லி வந்த நிலையில்,  ‘’செங்கோட்டையன் அப்போது அமைச்சராக இல்லை.  அவர் அமைச்சராக இருந்திருந்தால் அவருக்குத்தான் முதல்வர் பதவியை கொடுத்திருப்போம்’’ என்று இப்போது புதுக்கதை சொல்கிறார் அமமுக டிடிவி தினகரன்.

Gokula Indira1

தனக்கு கிடைக்க வேண்டிய நாற்காலி கைவிட்டு போய்விட்டதே என்கிற ஆத்திரம் செங்கோட்டையனுக்கு இல்லாமல் இல்லை என்று சொல்லி வந்தனர்.   அதற்கேற்றார் போல் அடிக்கடி  அதிமுக தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் உள்ளார் என்று செய்திகள் வரத்தொடங்கின.

அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலை அறிந்து, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன்  உள்ளிட்ட 6 பேர் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை கடந்த ஆண்டு சந்தித்து அதிமுகவுக்கு வெளியே இருக்கும் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை இணைக்க வேண்டும்.  அப்போதுதான் கட்சி வலுப்படும் என்று சொல்ல, இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவே இல்லை.

bjp admk

அது மட்டுமில்லாமல் அன்றிலிருந்து அந்த 6 பேருக்கும் கட்சியில் முக்கியத்துவம் குறையும்படியும், தனது ஆதரவாளர்களுக்கு  அதிக முக்கியத்துவம் கிடைக்கும்படியும் செய்து வந்திருக்கிறார் எடப்பாடி  பழனிசாமி.

இந்த நிலையில், கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி படம் மட்டும் தான் உள்ளது.  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லையே என்ற குற்றச்சாட்டை சொல்லி புறக்கணித்திருக்கிறார் செங்கோட்டையன்.

விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு விழா ஏற்பாட்டாளர்கள் தன்னை சந்தித்ததாகவும்,  அப்போது எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் மேடையில் இல்லை. இந்த திட்டம் வர காரணமானவர் ஜெயலலிதா.  அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர்.   அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிறைய பாடுபட்டிருக்கிறார் தனபால்.  இவர்களை தவிர்த்து எடப்பாடி பழனிசாமியை மட்டும் முன்னிலைப் படுத்தியதால் விழாவை புறக்கணித்து,  தன் உணர்வை வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார் செங்கோட்டையன்.

eps bjp

செங்கோட்டையனின் இந்த குற்றச்சாட்டுக்கு, ‘’இது கட்சி விழா அல்ல.  பொது விழா.  அதனால்தான் மற்றவர்களின் படங்கள் வைக்கப்பட வில்லை’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலான பதிலைச் சொல்ல, வைகைச்செல்வனோ, ‘’எடப்பாடிக்கு எதிராக திரும்ப வேண்டும் என்று வைத்திருந்த ரொம்ப நாள் திட்டத்தை இப்போது இதை காரணமாகச் சொல்லி எதிர்த்திருக்கிறார்’’ என்கிறார்.

ஆனால், எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரமோ தான் இருக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு தன்னையே ஓரங்கட்டுவதை யார்தான் பொறுத்துக்கொள்வார்? அந்த கோபம்தான் செங்கோட்டையனுக்கு வந்தது.  

admk bjp

அதுமட்டுமில்லாமல்,  அந்த பாராட்டுவிழாவில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜும் பங்கேற்றிருந்தார்.  அவருடன் இபிஎஸ் கைகோர்த்து சிரித்து நின்றதை கட்சியினர் யாரும் ரசிக்கவில்லை.  பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில்,  இபிஎஸ்சின் இந்த செயல் செங்கோட்டையனை மேலும் கோபப்படுத்தி இருக்கிறது.  ஜி.கே.நாகராஜ் அந்த பாராட்டு விழாவில் பங்கேற்கப்போவது முன்கூட்டியே செங்கோட்டையனுக்கு தெரிந்தது.  அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணிக்க இதுதான் முக்கியக்காரணம் என்கிறது.

TAGGED:edappadipalanisamiepskovaisenkottaiyan
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article EPS Vijay ADMK TVK Tamil Nadu ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக  டீல்!
Next Article Manipur Crisis India BJP தலையங்கம்: மணிப்பூர் (அ)நீதி

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

stalin dmk
இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
May 9, 2026 at 6:31 pm
ttv dinakaran ammk
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
May 9, 2026 at 4:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?