• அரசியல்
    அரசியல்Show More
    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    May 9, 2026 at 6:31 pm
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    May 9, 2026 at 4:23 pm
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-09.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-08.05.2026
    2026-05-09
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    ColombiaPlaneCrash
    உலகம்
    கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
    2026-03-24
    Israel ceasefire Iran,
    உலகம்
    போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
    2026-04-08
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    Prince Andrew arrested, King Charles brother,Online Tamil News
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய மன்னர் சார்லஸின் தம்பி ஆண்ட்ரூ கைது !
    2026-02-20
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: Starlink உடன் போட்டி போடும் Airtel, Jio!
Share
28°C
Chennai
mist
28° _ 27°
89%
2 km/h
Sun
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அறிவியல் & தொழில்நுட்பம்

Starlink உடன் போட்டி போடும் Airtel, Jio!

Last updated: 2025-02-27 11:49 am
188 Views
Share
Starlink Elon Musk Ambani Jio Airtel
Graphical Image
SHARE

ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற இந்திய நிறுவனங்கள் எலான் மஸ்க்கின் Starlink-க்கு போட்டியாக தாங்களும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவித்து வருகின்றன.

செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது எளிதான காரியம் அல்ல. கடந்த 2014-ம் ஆண்டு முதல் Starlink திட்டத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்கிய SpaceX நிறுவனம், 2018 பிப்ரவரியில் சோதனை முறையாக இரு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி சோதித்தது.

அதை தொடர்ந்து 2019 மே மாதத்தில் முதற்கட்டமாக 60 செயற்கைக்கோள்களை ஏவிய SpaceX, 2025 ஜனவரி மாதம் நிலவரப்படி கிட்டத்தட்ட 7,000 Starlink செயற்கைக்கோள் கூட்டங்களை (Satellite Constellation) விண்ணில் ஏவி இருக்கிறது. எதிர்வரும் காலகட்டங்களில் அந்த செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை சுமார் 42,000 வரை உயர்த்த SpaceX நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிலவரம் இப்படி இருக்க, அனைவருக்கும் இப்போது எழக்கூடிய கேள்வி இதை எப்படி இந்திய நிறுவனங்கள் செயல்படுத்த போகின்றன? என்பதுதான்.

ஏர்டெல்: இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்க தனது தாய் நிறுவனமான பாரதி எண்டர்பிரைசஸின் ஒரு பகுதியாக இருக்கும் OneWeb நிறுவனத்துடன் ஏர்டெல் கூட்டு சேர்ந்துள்ளது. லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் OneWeb, ஏற்கனவே 635 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

image 3

OneWeb நிறுவனத்தின் 21.2% பங்குகளை கொண்டு இந்தியாவைச் சேர்ந்த பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் Base Station-களை தயார் செய்துள்ள ஏர்டெல் நிறுவனம், மத்திய அரசிடமிருந்து செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

ஜியோ: லக்சம்பர்க் நாட்டை தளமாகக் கொண்ட SES நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்கு மத்திய அரசின் IN-SPACe மையத்திடம் இருந்து ஜியோ நிறுவனம் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றுள்ளது.

image 4

இரு நிறுவனங்களும் தங்கள் சொந்த செயற்கைக்கோள் கூட்டங்களை ஏவுவதற்குப் பதிலாக ஏற்கனவே உள்ள செயற்கைக்கோள் வழங்குநர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளன. ஏர்டெல் OneWeb நிறுவனத்துடனும், ஜியோ SES நிறுவனத்துடனும் இணைகிறது. தங்களின் சொந்த செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளை உருவாக்குவதற்கு பதிலாக இந்த அணுகுமுறை, அதிக செலவுகள் மற்றும் நேரத்தைத் தவிர்க்க உதவும்.

Starlink, OneWeb மற்றும் SES

Starlink, OneWeb மற்றும் SES ஆகியவை முதன்மையாக அவற்றின் செயற்கைக்கோள் சுற்றுப்பாதைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் வேறுபடுகின்றன.

நிறுவனம்நிறுவிய காலம்செயற்கைக்கோள்
எண்ணிக்கை
சுற்றுப்பாதைசுற்றுப்பாதை தூரம்
(Altitude Range in km)
தொடர்புகொள்ள எடுக்கும் நேரம்
(Projected Latency in milliseconds)
Projected Speeds (in Mbps)கவரேஜ் செயல்திறன்
SpaceX நிறுவனம் (Starlink)2002 (Starlink திட்டம் – 2015)7,000LEO (Low Earth Orbit)500-600 km20-40 msUp to 500 Mbpsகுறைந்த தூர சுற்றுப்பாதை மற்றும் வேகமாக பூமியை சூழல்வதால் உலகளாவிய கவரேஜ்க்கு ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் தேவைப்படுகின்றன
OneWeb
(Bharti Enterprises பங்குதாரர்)
2012630LEO (Low Earth Orbit)1,200-1,500 km70 ms Up to 195 Mbpsஉலகளாவிய கவரேஜ்க்கு அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் தேவை
SES
(லக்சம்பர்க் அரசு நிறுவனம்)
198570MEO (Medium Earth Orbit), GEO (Geostationary Orbit)8,000-12,000 km (MEO), ~35,786 km (GEO)100-200 ms (MEO), 500 ms (GEO)Upto 1 Gbps
(High throughput for video/data)
அதிக தூரம் மற்றும் பரந்த பரப்பளவு கொண்ட கவரேஜ் காரணமாக குறைவான செயற்கைக்கோள்களே போதும்

OneWeb மற்றும் SES நிறுவனங்களின் செயற்கைக்கோள் கூட்டங்கள் தற்போது கடல்சார் பாதுகாப்பு, ராணுவ தளங்கள், தொழில்துறை, பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்பட்டு வருகிறது. இவைகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு உபயோகிக்க Airtel மற்றும் Jio நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

செயற்கைக்கோள் இணைப்பு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது?

முதலில், மொபைல் சாட்டிலைட் கனெக்டிவிடி என்பது சாட்டிலைட் ஃபோன் பயன்படுத்துவதைப் போன்றது அல்ல. சாட்டிலைட் ஃபோன்கள் அழைப்புகளை மேற்கொள்ளவும் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும் முற்றிலும் செயற்கைக்கோள்களை நம்பியிருந்தாலும், அவை அதிக விலை கொண்டவை மற்றும் பாரம்பரிய நெட்வொர்க்குகள் வேலை செய்யாத மிகவும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் மக்களுக்காக வடிவமைக்கப்படுபவை ஆகும். இந்தியாவில், சாட்டிலைட் ஃபோன்கள் விற்பனையாளர்களில் BSNL நிறுவனமும் ஒன்றாகும்.

இருப்பினும், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் செல்லுலார் நெட்வொர்க்குகளை மட்டுமே சார்ந்துள்ளது. ஆனால் செயற்கைக்கோள் இணைப்புடன், ஒரு வழக்கமான ஸ்மார்ட்போன் ஒரு சாட்டிலைட் ஃபோனாகவும் செயல்படும். இதன் பொருள் செல்லுலார் கவரேஜ் இல்லாத பயனர்களை அவசர காலங்களில் செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் எளிதாக இணைக்க முடியும்.

image 5

தற்போது, ​​ஸ்மார்ட்போன்களில் உள்ள பெரும்பாலான செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்கள் அரசின் SOS அவசரகால செய்திகள் அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

செயற்கைக்கோள் இணைப்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, ​​ஸ்மார்ட்போன்கள் தரை அடிப்படையிலான செல் கோபுரங்களைச் சார்ந்திருக்காது. பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள்களின் நெட்வொர்க்குடன் நேரடியாக இணைக்கப்படும்.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்க காலதாமதமாகுவது ஏன்?

சேவையை தொடங்குவதற்கான முக்கிய தாமதம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விவாதம் தான்.

நிர்வாக vs. ஏலம்: செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரமை ஏலம் விடுவதன் மூலம் ஒதுக்கீடு செய்ய ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் விரும்புகின்றன. அதே நேரத்தில் எலான் மஸ்க்கின் Starlink, அமேசானின் Kuiper Project போன்ற சர்வதேச நிறுவனங்கள் நிர்வாக ஒதுக்கீட்டை விரும்புகிறார்கள். இந்திய அரசு இதுகுறித்த முடிவை இன்னும் இறுதி செய்யவில்லை.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த பரிந்துரைகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGGED:AirtelAmazon KuiperElon MuskJioSatellite InternetSpectrumStarlink
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article தலையங்கம்: பட்டாவும் பணியிடங்களும்
Next Article Sengottaiyan Edappadi ADMK Tamil Nadu எடப்பாடிக்கு செங்கோட்டையன் சொன்ன பதில்

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

stalin dmk
இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
May 9, 2026 at 6:31 pm
ttv dinakaran ammk
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
May 9, 2026 at 4:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?