• அரசியல்
    அரசியல்Show More
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-02.05.2026
    2026-05-09
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    2026-05-09
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    online-tamil-news-world-news-china-population
    உலகம்
    பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
    2026-01-21
    Venezuela-Nicolas Maduro-Donald Trump-US Attack-Venezuela Crisis-International Politics-Latin America-World News-US Military Action-Drug Trafficking Allegations
    உலகம்
    வெனிசுலா மீது தாக்குதல் ஏன்?… அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
    2026-01-03
    El Mencho
    உலகம்
    போதைப்பொருள் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை- மெக்சிகோவில் பதற்றம்!
    2026-02-23
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்!
Share
30°C
Chennai
broken clouds
31° _ 29°
82%
6 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்!

Last updated: 2025-03-04 1:53 pm
Spark Desk 122 Views
Share
fishing tamilnadu
SHARE

கடலுக்குள் செல்லும்  தமிழக  மீனவர்கள் திரும்பவும் கரைக்கு வருவது என்பது இலங்கை கடற்படையினர் கையில்தான் இருக்கிறது என்கிற அவலம்  நெடுங்காலமாக தொடர்வது வேதனை.

எல்லை மீறி மீன் பிடிப்பதாகச் சொல்லி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பறிப்பதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை அடித்து விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் என தொடர்ந்து தனது அராஜகப் போக்கை கடைப்பிடித்து வருகிறது இலங்கை கடற்படை.

இலங்கை   கடற்படையினருக்கு அஞ்சியே மீன் பிடிக்க செல்ல வேண்டிய நிலையை மாற்றக்கோரி அவ்வப்போது மீனவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  தமிழ்நாடு அரசும் மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.  ஆனால், மத்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அலட்சியப்போக்கையே கையாண்டு வருகின்றது.

sea

தமிழக மீனவர்களின் விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் இலங்கை கடற்படையினருக்கு ரொம்பவே வசதியாகப் போய்விடுகிறது. இது இந்திய மீனவர்களின் பிரச்சனை என்று நினைக்காமல், தமிழக மீனவர்களின் பிரச்சனை என்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது மத்திய அரசு எனும் குற்றச்சாட்டை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர் மீனவர்கள். தமிழக முதல்வரும் கூட, ‘’ ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க வேண்டும்’’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆனாலும் மத்திய அரசுக்கு இன்னமும் அப்படி ஒரு எண்ணம் வரவே இல்லை. அதனால் தமிழக மீனவர்களின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் பறிக்கப்படுவதும் அதிகரித்திருக்கிறது.  இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் எதிரொலிதான் தற்போது ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில்  நடந்து வரும் மீனவர்களின் தொடர் போராட்டம்.

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் கோரி உண்ணாவிரத போராட்டம், கஞ்சி தொட்டி திறப்பு பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தவர்கள், ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் போது இலங்கை சிறையில் இருப்போரை மீட்க அபராத தொகை கேட்பதால் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியும் பார்த்துவிட்டனர்.  இதன் பின்னரும் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் விரக்தியின் விளிம்பிற்கே சென்று தீக்குளிப்பு போராட்டத்தை முன்னெடுக்க முனைந்தனர்.   முதலமைச்சரின் வேண்டுகோளால் அந்த போராட்டத்தை கடைசி நேரத்தில் கைவிட்டுள்ளனர்.

madam

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களின் நலன் கருதி, இலங்கையில் மீட்க முடியாத நிலையில் உள்ள விசைப்படகுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தொகை 6 இலட்சம் ரூபாயினை 8 இலட்சமாக உயர்த்தி வழங்கவும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தின உதவித்தொகையை  350 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர்,மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நேரில் பேசி தமிழக மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க பிரதிநிதிகள் குழுவையும் அமைத்துள்ளார்.

fish

’’எந்த ஒரு தமிழக மீனவரும் இனி இலங்கை கடற்படையினரால் தாக்கப் படமாட்டார்கள்.  அவர்களின் படகுகள் பறிக்கப்படாது. வலைகள் கிழிக்கப்படாது’’ என்று 2014ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மோடி,   அதை நிறைவேற்றவே இல்லை.  அதனால்தான், ’’பாஜக அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் இலங்கை கடற்படையினரால்  3,656 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி வரையிலும் இலங்கை கடற்படையினர் 736 முறை தமிழக மீனவர்களை தாக்கி இருப்பதாக ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சரே அறிக்கை தாக்கல் செய்துள்ளார்’’ என்று குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர்.  

’’எல்லை தாண்டி வந்து எங்கள் கடல் வளத்தை அள்ளிச் செல்கிறார்கள்.  இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி சிறிய மீன்களையும் அள்ளிச்சென்று இலங்கை கடல் வளத்தை அழிக்கிறார்கள். இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’’ என்று தமிழக மீனவர்கள் மீது மோசமான குற்றாட்டினை சுமத்தி தப்பித்துக் கொண்டிருக்கிறது இலங்கை கடற்படை.  இதை கண்டிக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதன் வெப்பம் வீசுகிறது தங்கச்சிமடத்தில்.

ravi

இவர்களின் கண்ணீர் துடைக்கிறேன் என்று சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியோ, மத்திய அரசிடம் பேசி பிரச்சனையை தீர்க்க வழி செய்யாமல், கச்சத்தீவு பற்றி பேசி அரசியல் செய்துவிட்டு வந்திருக்கிறார்.

’’நாட்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் எங்கள் பிரச்சனைகளை ஏன் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை?’’என்று மீனவர்கள் கேட்பதன் நியாயம் உணர்ந்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு மத்திய  அரசுக்குத்தான் உள்ளது.  ஆனால் மத்திய அரசு தீர்வு காண முயற்சிக்கவில்லை என்பதால்,   ’’இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் காலங்காலமாக தாக்கப்பட்டு வருவது இனியும் தொடரக்கூடாது.  இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். பிரதமர் மோடிதான் இந்தப் பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும்’’ என்று அழுத்தமாக குரல் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

yh

இந்த முறை விடுவதாக இல்லை. மத்திய அரசு தரப்பில் இருந்து நேரடியாக வந்து தங்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக சொன்னால்தான் போராட்டத்தை கைவிடும் உறுதியில் உள்ளனர் தங்கச்சிமடம் போராட்ட மீனவர்கள்.

பிரதமரே நேரடியாக தலையிட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.  அதுவரையிலும் அலையாடும் மீனவர்களின் வாழ்க்கை அல்லாடும் துயரம் நீடிக்கவே செய்யும் நிலை இருக்கிறது.

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article thangam thennarasu அண்ணாமலைக்கு  அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த பதிலடி!
Next Article eps admk 1 கூட்டணி கீட்டணி – பாஜக கீஜக : மழுப்பும் எடப்பாடி

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Online Tamil News
ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
May 9, 2026 at 12:05 pm
poongundran sankaralingam
வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
May 8, 2026 at 4:35 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?