• அரசியல்
    அரசியல்Show More
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    May 19, 2026 at 3:45 pm
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
    vijay seeman
    விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
    May 19, 2026 at 3:01 pm
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    Tamil Horoscope May 16 2026,
    இன்றைய ராசிப்பலன்-16.05.2026
    2026-05-19
    Ebola outbreak,
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    2026-05-19
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    2026-05-19
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    American-soldiers -receive -Christmas-gift-Rs. 1.60 lakh- Trump-announcement
    உலகம்
    ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு !
    2025-12-18
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Online Tamil News
    உலகம்
    நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு 7.5 ஆண்டுகள் சிறை : காரணம் என்ன?
    2026-02-09
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : லேப்-டாப் கியர்
Share
32°C
Chennai
scattered clouds
32° _ 31°
69%
4 km/h
Wed
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : லேப்-டாப் கியர்

Last updated: 2026-01-06 6:53 am
Rohini R 54 Views
Share
Tamil Nadu- Laptop scheme- College students- Government college- AI laptops- Digital learning- Education initiatives- M.K. Stalin- Higher education- Student empowerment
SHARE


தமிழ்நாட்டில் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி எனும் லேப்டாப் வழங்கும் திட்டத்தை (Laptop scheme) தொடங்கியுள்ளது மாநில அரசாங்கம். அரசு கலை-அறிவியல், பொறியியல், வேளாண், மருத்துவம் உள்ளிட்ட பல வகை கல்லூரிகளும், அரசு பாலிடெக்னிக்குகள், அரசு ஐ.டி.ஐ.கள் ஆகியவற்றில் பயிலும் மாணவ-மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ-மாணவியருக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

உலகம் உங்கள் கையில் என்ற பெயரில் நடைபெற்ற இதற்கான விழாவில், தமிழ்நாடு அரசின் திட்டங்களால் படித்து உயர் பொறுப்புகளுக்கு வந்தவர்கள், பொருளாதார அறிஞர்கள், அறிவியல் துறை சாதனையாளர்கள், கலைத்துறையினர் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், மாணவர்களுக்கான வழிகாட்டுதலையும் எடுத்துரைத்துள்ளனர். கல்வி சிறந்த தமிழ்நாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என ஏற்கனவே நடத்தப்பட்ட நிகழ்வுகளில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு ஆகியவை குறித்து பயனாளிகள் உணர்ச்சிப்பூர்வமாக விளக்கியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, உலகம் உங்கள் கையில் நிகழ்விலும் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த பார்வைகள் வெளிப்பட்டன.

இந்தியாவில் தமிழ்நாடு (Tamilnadu) முன்னேற்றம் அடைந்துள்ள மாநிலம் மட்டுமல்ல, தனித்துவமான மாநிலமும் கூட. வளர்ச்சி என்பது ஒருசாராருக்குரியதல்ல, அது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைத்துப் பகுதிகளிலும் அதனதன் தன்மைக்கேற்ப சீரான வளர்ச்சி இருக்கவேண்டும் என்பதையும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் காண முடிகிறது. பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது, சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிக் கட்சி ஆட்சியில் தொடங்கி, சுதந்திர இந்தியாவிலும், குடியரசான பிறகு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசு காலத்திலும், அதன்பிறகு 1967 முதல் நடைப்பெற்று வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் இந்தத் தன்மை மேம்பட்டு வருவதைக் காணலாம்.

சுதந்திர தினத்தில் இந்தியாவின் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு அறிவித்த மருத்துவக் காப்பீடு, கிராமங்களுக்கு மின் வசதி, விவசாயிகளுக்கான உழவர் சந்தை போன்றவை தமிழ்நாட்டில் 1970களில் தொடங்கி 1990களிலேயே நிறைவேறிவிட்டன. கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் உள்ள மாநிலமாகத் திகழ்கிறது. தேசிய கல்விக்கொள்கை 2020 வலியுறுத்தும் இலக்குகளை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி, தொழிற்கல்லூரிக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி எனத் தமிழ்நாடு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவற்றின் மீது கவனம் செலுத்தி வளர்த்துள்ளது.

காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, இந்தியாவில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதலில் உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு. 1999ல் நடைபெற்ற தமிழ்நெட் 99 இணைய மாநாடு தொடங்கி, 2010 செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு வரை பல கட்ட முயற்சிகளால் கணினி அறிவியல் தொடர்பாகவும், அதில் தமிழின் வளர்ச்சி தொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டைடல் பார்க்குகள் பல மாவட்டங்களில் உருவாக்கப்பட்டு, தரமான வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாட்டின் இளைஞர்கள் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு என்பது அதிகளவில் நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகும். அதாவது, சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்கள் நவீன வசதிகளைக் கொண்டதாக இருப்பதுடன், அந்த நகரங்களை அடுத்துள்ள கிராமங்களிலும் நவீன வசதிக் கட்டமைப்புகள் உள்ளன. மருத்துவமனை, பள்ளிக்கூடம், இணைய சேவை, வீடுதோறும் கலர் டி.வி., செல்போன் பயன்பாடு ஆகியவை கிராமப்புறங்களிலும் நிறைந்துள்ளன. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார். அதே அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் அது நிறுத்தப்பட்டது.

தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் கல்லூரி மாணவ-மாணவியர் (College students)பயன்பெறும் வகையில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட  மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் அறிவுத் தேடலுக்குத் துணை நிற்கும். இதற்கான விழாவில் முதலமைச்சர் பேசும்போது, ஒவ்வென்றிலும் நல்லது-கெட்டது என்று இரண்டும் இருக்கும். நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி, இந்த மடிக்கணினிகள் மூலம் மாணவ சமுதாயம் எதிர்கால வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ச்சியாக பல நல்ல முன்னெடுப்புகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய லேப்டாப் என்பது டாப் கியர் திட்டம்.

TAGGED:AI laptopsCollege studentsDigital learningEducation initiativesGovernment collegeHigher educationLaptop schemeM.K. StalinStudent empowermentTamil Nadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Tirupparankundram- case -Karthigai Deepam-Madurai news-Tamil Nadu High Court-Court verdict-Deepam permission-Dargah administration-Religious harmony-Tamil Nadu pilgrimage site திருப்பரங்குன்றம் விவகாரம் – உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன ?
Next Article Tokyo fish market- Tuna auction- Sushi Zanmai- Kiyoshi Kimura- Bluefin tuna- Seafood auction- Record tuna sale- Japanese fish market இந்த மீன் விலை ரூ.28 கோடி!

உலகம்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
May 19, 2026 at 4:18 pm
vijay seeman house
விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
May 19, 2026 at 3:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?