சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் (Salem), ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

13-ந்தேதி மழைக்கு வாய்ப்பு
13-ந்தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14-ந்தேதி வானிலை நிலை
14-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தகவல் தெரிவிப்பட்டுள்ளது.(Online Tamil News)
15 & 16-ந்தேதிகள் வானிலை நிலை
15 மற்றும் 16-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30–31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21–22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிப்பட்டுள்ளது.


