[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா

T.R.Kathiravan
Last updated: 2026-04-17 3:50 pm
T.R.Kathiravan T.R.Kathiravan
zoho sridhar

ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு ஒவ்வொரு பாஜகவுக்கு தேர்தல் நன்கொடை அளித்திருக்கிறார்.  இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றதும் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து  விசாரணை நடத்தியதில் நேற்று மட்டும்  70 லட்சம் ரூபாய்  தேர்தல் நன்கொடை அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

ஜோஹோ பன்னாட்டு நிறுவனத்தின் நிறுவனத்தலைவர் ஸ்ரீதர் வேம்பு.  உலகம் முழுவதும்  ஜோஹோ கிளைகள் விரித்திருந்தாலும் தலைமை நிலையம் தென்காசியில் அமைந்திருக்கிறது. இங்கேதான் ஸ்ரீதர் வேம்பு வசித்து வருகிறார்.

 நகரத்து நெரிலை வெறுத்து கிராமத்து காற்றை சுவாசித்து வாழ்ந்துகொண்டே, இங்கிருந்தே உலகம் முழுவதும் உள்ள கிளைகளை நிர்வகித்து வருகிறார். 

இவர் பாஜக ஆதரவாளர் என்று அடிக்கடி விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளருக்கு தேர்தல் நன்கொடை அளித்திருக்கிறார் என்று புகார்.

’’ ஒரே செக் மூலம்  ஒரு பாஜக நிர்வாகிக்கு 70 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு.  அந்த நபர் மூலமாக வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்திருக்கிறது.   70 லட்சம் ரூபாய் பணப்பட்டுவாடா நடந்துள்ளது தெரியவந்துள்ளது.  அந்த ஸ்ரீதர் வேம்பு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்கிறார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி.

TAGGED:BJPonline tamil newssrithar vembutamil news todaytamilnaduzoho
Previous Article விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
Next Article Daily Horoscope , இன்றைய ராசிப்பலன்- 18.04.2026
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account