• அரசியல்
    அரசியல்Show More
    vijay tvk kolam1
    ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
    Apr 18, 2026 at 11:50 am
    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    Apr 17, 2026 at 3:50 pm
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    Apr 17, 2026 at 12:25 pm
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    Apr 16, 2026 at 5:23 pm
    aadhav arjuna wife
    மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜூனா மறைத்தது ஏன்?
    Apr 16, 2026 at 1:30 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    vijay tvk kolam1
    ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
    2026-04-18
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    2026-04-18
    Daily Horoscope ,
    இன்றைய ராசிப்பலன்- 18.04.2026
    2026-04-18
    Daily horoscope April 17 2026
    இன்றைய ராசிப்பலன்- 17.04.2026
    2026-04-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
  • உலகம்
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    El Mencho
    உலகம்
    போதைப்பொருள் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை- மெக்சிகோவில் பதற்றம்!
    2026-02-23
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    italy-Mountain-village-first baby-Abrazo-Pagliara dei Marsi-Laura Bussi Trabucco
    உலகம்
    மலை கிராமத்தில் 30 ஆண்டுக்கு பிறகு பிறந்த குழந்தை – இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
    2025-12-29
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: தலையங்கம்: மத்திய அரசின் அயோக்கியத்தனம்
Share
35°C
Chennai
few clouds
36° _ 34°
63%
5 km/h
Sat
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: மத்திய அரசின் அயோக்கியத்தனம்

Spark Web Desk
Last updated: 2025-02-27 11:39 am
Spark Web Desk Spark Web Desk 109 Views
Share
BlackMail BJP Government India
Graphical Image
SHARE

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிப் பாடத்திட்டம் எனும் மத்திய அரசின் செயல்பாட்டைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாதது அரசியல் சட்டத்தை மீறுகின்ற செயல் என்றும் அதனால் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கான நிதியின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஆண்டுத் தொகையான 2,152 கோடி ரூபாயை வழங்கமுடியாது என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் யாதவ் தெரிவித்திருக்கிறார். இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நிலைப்பாடு என்பதுடன், மத்திய அரசின் அப்பட்டமான அயோக்கியத்தனத்தையும் காட்டுகிறது.

மத்திய கல்வி அமைச்சருக்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர், இந்திய அரசியல் சட்டத்தில் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது எனக் கேட்டிருக்கிறார். சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்று மத்திய அமைச்சர் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். முதலமைச்சர் கேட்டிருப்பதில் நியாயம் உள்ளது. கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து எமர்ஜென்சி காலத்தில் பொதுப்பட்டியல் எனும் ஒத்திசைவுப் பட்டியலுக்கு சென்றது. அதாவது, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்த பட்டியலில் கல்வி உள்ளது. எனவே, மாநில அரசின் கருத்துகள்-மாநில அரசுக்கான உரிமைகள் கல்வித் துறை சார்ந்த திட்டங்களில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கை எனும் தாய்மொழி+இணைப்பு மொழி ஆங்கிலப் பாடத்திட்டம் மாணவர்களின் கல்விக்குப் பெருந்துணையாக இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே விரிவாக எடுத்துக் கூறியுள்ளன. அண்மையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு முன் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், கொரோனா காலத்திற்குப் பிறகு பள்ளிக்கல்வியில் மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்த்ததில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் பெரும் பயனளித்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களின் விகிதாச்சாரத்திலும் தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகின்ற சராசரியைவிட தமிழ்நாடு அதிகளவில் உள்ளது. முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பு முடித்த பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் இந்தியாவில் அதிகமாக உள்ளது. படித்த பெண்கள் நிறைந்த மாநிலம் என்பதால் தொழில்துறை சார்ந்த பணியாளர்களில் இந்தியாவின் மொத்த பெண் பணியாளர்களில் தமிழ்நாட்டின் அளவு 43%ஆக உள்ளது. மத்திய அரசு தனது பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்குகின்ற நிதியின் விகிதத்தைவிட, மாநில அரசு கல்விக்கு ஒதுக்குகின்ற நிதியின் விதிகம் கூடுதலாகும்.

இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்று புரியாமலும், தனது அரசின் புள்ளிவிவரங்களைக் கூட அறியாமலும், மாநில உரிமை மீது மத்திய அரசின் மொழித் திணிப்பு எனும் கொடூர ஆயுதத்தைக் கொண்டு தாக்கியிருக்கிறார் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ள கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஆண்டுக்கு 2152 கோடி ரூபாய் நிதியைப் பெற வேண்டிய தமிழ்நாடு அரசின் கல்வித்துறையை திட்டமிட்டு வஞ்சிக்கிறது மத்திய அரசு. இதனை பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்குமான அரசியல் பகை என்று தமிழ்நாடு கருதிவிடக்கூடாது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசினால் ஆண்டுதோறும் 40 லட்சம் மாணவமணிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். 32ஆயிரம் ஆசிரியர்களின் ஊதியம் பாதிக்கப்படும். அவர்களின் குடும்பம் பரிதவிக்கும். நிரந்தரப் பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமின்றி, பகுதி நேர ஆசிரியர்கள் 12ஆயிரம் பேர், சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கானக் கல்வியை வழங்கக்கூடிய கல்வியாளர்கள், தகவல் உள்ளிடுபவர்கள் உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறை சார்ந்த மற்ற பணியாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் அனைவருக்கும் கல்வி உரிமை என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அது நடைமுறைக்கு வந்தது. அதன்படி, 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பொருளாதார சூழலைக் கடந்து கட்டாயமாகக் கல்வியைத் தந்தாக வேண்டும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, அருகிலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டு, அந்தப் பள்ளிக்கானக் கட்டணத்தை அரசாங்கம் வழங்கும். மத்திய அரசின் வஞ்சகத்தால், நிதி கிடைக்காத நிலையில், அடிப்படைக் கட்டாயக் கல்வியும் கிடைக்காமல் போகும் சூழ்நிலை உள்ளது. ரெசிடென்ஷியல் ஸ்கூல் எனப்படும் உண்டு-உறைவிடப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களும பாதிக்கப்படுவார்கள்.

இந்தி வெறி எனும் கொடூர ஆயுதத்தால் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைத் துண்டாக்கும் வேலையைச் செய்கிறது மத்திய அரசு.

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Sengottaiyan ADMK DMK Tamil Nadu Politics இரட்டை இலை செங்கோட்டையனுக்கா?
Next Article தலையங்கம்: புனிதப் பலிகள்?

உலகம்

China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
China
காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
உலகம் Apr 14, 2026 at 2:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay tvk kolam1
ஜோதிடர் சொன்னபடி கோலம் போட்ட விஜய்!
Apr 18, 2026 at 11:50 am
Jacqueline Fernandez ,
சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
Apr 18, 2026 at 11:31 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?