மாம்பழம் சின்னம் யாருக்கு? என்ற போட்டியில் அன்புமணிக்குத்தான் மாம்பழம் என்பது உறுதியாகி இருக்கிறது.
ஆதரவாளர்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பாமகவையும் மாம்பழம் சின்னத்தையும் எடுத்துக்கொண்டார் அன்புமணி. ஆனால் இந்த சின்னம் தனக்குத்தான் சொந்தம் என்று சொல்லி ராமதாஸ் உரிமை முழக்கம் எழுப்பினார்.

இது தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ராமதாஸ், அன்புமணி இருவருமே பிடிவாதம் காட்டி வருவதால், ‘’மாம்பழம் ஜூஸ் ஆகிவிடப்போகிறது’’ என்று நீதிபதியே கமெண்ட் அடித்தார்.
பாமக அங்கீகாரம் இழந்ததால் பொதுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, முதலில் கோரியவருக்கே முன்னுரிமை என்கிற அடிப்படையில் அன்புமணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக எந்த முகவரியில் இருந்து கடிதம் வந்ததோ அதே முகவரிக்கு சின்னம் கடிதம் அனுப்பப்பட்டது. மற்றபடி தனிப்பட்ட ராமதாசுக்காகவோ, அன்புமணிக்காகவோ சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாம்பழம் சின்னத்தை முடக்கும் அதிகாரம் இல்லை. நீதிமன்றமும் சின்னத்தை முடக்க முடியாது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் வாதிட்டது.

இதன் பின்னர், நீதிமன்றமும் அன்புமணிக்குத்தான் மாம்பழம் சின்னம் என்பதை உறுதி செய்திருக்கிறது.