[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அரசியல் பயணம்

stalin ops
T.R.Kathiravan
Last updated: 2026-02-27 4:15 pm
T.R.Kathiravan T.R.Kathiravan

*தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கிராமத்தில் பிறந்தார்

*பெரியகுளம் விக்டோரியா அரசு நினைவுப்பள்ளியில் பள்ளிப்படிப்பு

*மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பி.யூ.சி. படிப்பு

*உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் பி.ஏ. படிப்பு

*பி.ஏ. பட்டம் பெற்றும் பெரியகுளத்தில் டீ கடை நடத்தி வந்தார்

*எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஓபிஎஸ் 1972ல் அதிமுக தொடங்கப்பட்டபோது அதில் இணைந்தார்

ops theni

முதல் பதவி:

*1977ல் பெரியகுளம் நகர 18வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதி – இதுவே ஓபிஎஸ்சின் முதல் பதவி

*1984ல் 33 வயதில் பெரியகுளம் எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர்

*1987ல் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் ஜானகி அணியில் இணைந்தார்

*1991ல் பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி இயக்குநர்

*அதிமுக ஒன்றிணைந்தபோது 1993ல் அதிமுக பெரியகுளம் நகர கழகச் செயலாளர்

*1996ல் உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகரசபை தலைவர்

o panneer

முதலமைச்சர்:

*2001ல் பெரியகுளம் எம்.எல்.ஏ. – முதல்முறை எம்.எல்.ஏ. ஆனதுமே வருவாய் துறை அமைச்சர், முதலமைச்சர் ஆனார்

*2001ல் டான்சி வழக்கில் ஜெ., சிறை சென்றதால் முதல்வரானார் – 21.9.2001 முதல் 1.3.2002 வரை முதலமைச்சராக இருந்தார்

2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர்

2006ல் பெரியகுளத்தில் வென்று எதிர்க்கட்சி தலைவர் – துணைத்தலைவர் ஆனார்

2011ல் போடி தொகுதியில் வென்று நிதி அமைச்சர் – அவை முன்னவர்

2ஆவது முறை முதலமைச்சர்:

*2014ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறை சென்றபோது முதல்வரானார்

*29.9.2014 முதல் 22.5.2015 வரை 2வது முறை முதலமைச்சர் ஆனார்

*2016ல் போடி தொகுதியில் மீண்டும் வென்று நிதி அமைச்சரானார்

mk stalin o pannerselvam

3ஆவது முறை முதலைமைச்சர்:

*ஜெ., மறைவுக்கு பின்னர் 2017ல் 3ஆவது முறையாக முதல்வரானார்

*முதல்வர் பதவியை சசிகலா பறித்ததால் 2017ல் தர்மயுத்தம்

*இபிஎஸ் உடன் சமரசம் ஏற்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரானார்

*2021ல் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்

*2023ல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தொடங்கி எடப்பாடிக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தினார்

*2024ல் மக்களவை தேர்தலில் சுயேட்சையாக ராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்தில் நின்று தோல்வியுற்றார்

*2026ல் அதிமுகவில் தன்னை சேர்த்துக்கொள்ளச் சொல்லி வெளிப்படையாக கோரிக்கை வைத்தார். எடப்பாடி பழனிசாமி இவரது கோரிக்கையை  நிராகரித்தார்

*சட்டப்பேரவை நிறைவுநாளில் திமுக அரசை பாராட்டி பேசி பரபரப்பை ஏற்படுத்தினர் ஓ.பன்னீர்செல்வமும் ஐயப்பனும். முன்னதாக முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்ட போதும், முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்றும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஓபிஎஸ்

*27.2.2026ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

TAGGED:ADMKBJPepsonline tamil newsopannerselvamtamil news todaytamilnadu
Previous Article Pakistan Afghanistan border attack, 55 Pakistani soldiers killed, ஆப்கானிஸ்தான் எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு !
Next Article Pakistan retaliatory attack ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் -133 பேர் உயிரிழப்பு
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account