அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் டிடிவி தினகரன் ’அமமுக’வை தொடங்கினார். பன்ருட்டி ராமச்சந்திரன் ’எம்.ஜி.ஆர். அதிமுக’வை தொடங்கி உள்ளார். சசிகலா , அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கியது போன்று பெங்களூரு புகழேந்தியும் ‘ புரட்சி அதிமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.

தனது கட்சியின் பெயரில் உள்ள புரட்சி என்ற வார்த்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைக் குறிக்கும் என்கிறார் பெங்களூரு புகழேந்தி. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓபிஎஸ்சின் அதிமுக ஒருங்கிணைப்புக்குழுவில் இருந்தார். ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பிக்காமல் திமுகவுக்கு சென்றுவிட்டதால் தனிக்கட்சி தொடங்கினார் பெங்களூரு புகழேந்தி.
ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்துள்ள நிலையில் அவரின் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தனது நிர்வாகிகளுடன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.



