உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 40-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட விருந்து உணவைச் சாப்பிட்ட விருந்தினர்களுக்கு, சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.(Online Tamil News)



