• அரசியல்
    அரசியல்Show More
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    May 19, 2026 at 3:45 pm
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
    vijay seeman
    விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
    May 19, 2026 at 3:01 pm
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    Tamil Horoscope May 16 2026,
    இன்றைய ராசிப்பலன்-16.05.2026
    2026-05-19
    Ebola outbreak,
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    2026-05-19
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    2026-05-19
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    Cyclone Gezani
    உலகம்
    மடகாஸ்கரில் கெசானி புயல் – 59 பேர் பலி, 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு !
    2026-02-16
    online-tamil-news-world-news-tamil
    உலகம்
    அமெரிக்காவுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை!
    2026-01-24
    America-Oil tanker-Venezuela -Capture-trump-Skipper-world news
    உலகம்
    வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா…இதுதான் காரணமா?
    2025-12-11
    Jeffrey Epstein -Online Tamil News
    உலகம்
    அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்- எப்ஸ்டீன் விவகாரத்தின் பின்னணி?
    2026-02-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : அவசர உலகின் அவசியம்
Share
34°C
Chennai
mist
34° _ 33°
61%
7 km/h
Wed
38 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : அவசர உலகின் அவசியம்

Last updated: 2026-01-21 11:59 am
Rohini R 67 Views
Share
Online Tamil News
SHARE

உணவோ, மளிகைப் பொருட்களோ, வீட்டுக்குத் தேவையான மற்ற பொருட்களோ ஆன்லைன் செயலி மூலமாக ஆர்டர் போட்டால் அடுத்த 10 நிமிடத்தில் வந்து சேர்ந்துவிடும் என்பதுதான் இன்றைய வணிக உலகம். பயனாளிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே எதையும் வாங்கிவிட முடியும். அதுவும் 10 நிமிடத்தில் கிடைத்துவிடும். அலைய வேண்டியதில்லை. நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. இது ஆன்லைன் செயலி மூலமாக வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கும், அதனைப் பயன்படுத்தும் மக்களுக்கும் மிகவும் உபயோகமாக உள்ளது. ஆனால், நிறுவனத்தின் பொருளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களுக்கு?

அவர்களைத்தான் Gig Workers என்று கூறுகிறார்கள். ஸ்விகி (Swiggy) , சொமாட்டோ, பிளிங்கிட் போன்ற ஆன்லைன் விற்பனைத் தளங்கள் தங்களிடம் உள்ள பணியாளர்களை 10 நிமிடத்திற்குள் டெலிவரி செய்தாக வேண்டும் என்று வேகப்படுத்துகிறது. அந்த நேரத்திற்குள் செல்ல முடியாவிட்டால், வாடிக்கையாளர்கள் தங்களக்கு அந்தப் பொருள் வேண்டாம் என்று சொல்வது உண்டு. இது நிறுவனத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும். அதனால், எந்தளவுக்கு வேகமாக டெலிவரி செய்ய வைக்க முடியுமோ அந்தளவுக்கு ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அவசரப்படுத்துகின்றன.

சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள போக்குவரத்து நெருக்கடிக்கிடையே டூவீலரை வளைந்து, நெளிந்து வேகமாக ஓட்டி வந்து, பத்து நிமிடத்திற்குள் டெலிவரி செய்வது என்பது, கம்பி மேல் பைக் ஓட்டுவது போன்ற சாகசமாகும். இதனால் விபத்துகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. டெலிவரி செய்பவர்கள் மட்டுமல்ல, அவர்களின் வாகனத்தில் மோதி பொதுமக்களும் பாதிப்படைகிறார்கள். டெலிவரி செய்யும் இளைஞர்கள் மக்களின் கோபத்திற்குள்ளாகி, மோசமாகத் திட்டு வாங்குகிறார்கள்.(Online tamil news)

இந்தியாவில் வேலை கிடைப்பது என்பது படிப்பைப் பொறுத்ததாக இல்லாமல், வாய்ப்பைப் பொறுத்ததாக உள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், பொறியியல் போன்ற தொழிற்படிப்பு முடித்தவர்கள் கூட இந்த வேலைக்கு வருகிறார்கள். பகுதிநேரமாக இந்த வேலையைப் பார்க்கிறவர்களும் உண்டு. அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கவேண்டிய வேலை, வாழ்க்கைக்கே கேள்விக்குறியாக மாறக்கூடிய சூழல் இருப்பதால், 10 நிமிட டெலிவரி குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

பொதுமக்களைப் பொறுத்தவரை, முன்புபோல வரிசையில் நின்று, காத்திருந்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்ற மனநிலையிலிருந்து முற்றிலும் மாறிவிட்டார்கள். சினிமா திரையரங்குகள் முன் வரிசையில் நிற்கும் இளைஞர்கள் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன் கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை. ஆனால், இப்போது முதல் நாள் முதல் காட்சி என்பதே ஆன்லைன் புக்கிங் மூலமாகத்தான் நடக்கிறது. ஆன்லைன் புக்கிங் தொடங்கியவுடன் டிக்கெட் பதிவு செய்துவிடவேண்டும், திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிடவேண்டும் என்பதுதான் இளைஞர்களின் ஆர்வம். அதுபோலவே, பெண்களும் காலம் காலமாக வீட்டு வேலைகளுக்காகவே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களாக இருந்தார்கள். இப்போது அவர்களுக்கு அறிவியல் வளர்ச்சியும் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றமும் சுதந்திர வெளியைக் கொடுக்கிறது. விரைவாகப் பொருட்கள் வீட்டுக்கு வந்தால் பெண்களின் வேலைச்சுமை பெருமளவு குறையும். இவற்றுக்கிடையேதான் Gig Workersகளாக உள்ள இளைஞர்களின் வாழ்க்கை அல்லாடுகிறது.

தங்களின் வாழ்க்கையையே பணயம் வைக்க வேண்டிய சூழல் இருப்பதைக் கருத்திற்கொண்டு, கடந்த டிசம்பர் 31ஆம் நாள் அவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தார்கள். இதையடுத்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்ட்சுக் மாளவியா, ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களை (Online delivery companies) அழைத்துப் பேசினார். பணியாளர்களின் முக்கிய கோரிக்கையான 10 நிமிட டெலிவரி என்பதை நிறுத்தவேண்டும் என்பது குறித்து நிறுவனத்தினரிடம் அமைச்சர் பேசினார். இதன் விளைவாக, 10 நிமிட அதி விரைவு டெலிவரியை நிறுத்துவதாக நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. Gig Workers அனைவருக்கும் இது மிகப் பெரிய நிம்மதியைக் கொடுக்கும். அவர்களின் குடும்பத்தாருக்கும் அந்த நிம்மதி பொருந்தும். மத்திய அரசின் இந்த முயற்சி ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தியுள்ளது.

Gig Workers குறித்து தமிழ்நாடு மாநில அரசு எப்போதும் அக்கறை கொண்ட அரசாக உள்ளது. கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் விரைந்து பயணித்து டெலிவரி செய்யும் அவர்களுக்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை போன்ற நகரங்களில் ஓய்வறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. டெலிவரி செய்தபிறகோ, ஆர்டர் ரெடியாகும் வரையிலோ அவர்கள் அங்கு ஓய்வெடுக்க முடியும். இந்த அக்கறை இந்தியா முழுவதும் பரவவேண்டும்.

மனிதப் பிறவிக்கு டெலிவரி என்பது 10 மாதம். ஆனால், மனிதர்களுக்கு 10 நிமிடங்களில் டெலிவரி தேவைப்படுகிறது. அதுவே வணிகத்தின் இலக்காக மாறுகிறது. அதில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தொடரவேண்டியது அவசர உலகில் அவசியமாகும்.

TAGGED:0-Minute DeliveryGig EconomyLabour RightsOnline Delivery Platformsonline tamil newstamil newsUrban India
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article khajuraho temple தமிழகத்தின் கஜூராஹோ!
Next Article vivekananda featured ஜோதிடம் பார்க்க ஏன் வலங்கைமான் வந்தார் விவேகானந்தர்?

உலகம்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
May 19, 2026 at 4:18 pm
vijay seeman house
விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
May 19, 2026 at 3:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?