தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும்தான் எதிரெதிர் கட்சிகளாக இருக்கின்றன. ஆனால் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய், திமுகவுக்கும் தனது தவெகவுக்கும்தான் போட்டி என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார்.
அவர் எந்த புள்ளிவிபர கணக்கில் அப்படி பேசுகிறாரோ என்று தெரியவில்லை. தன் கட்சியினரை ஊக்கப்படுத்தவே அப்படி சொல்கிறார் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் விஜய்யின் இந்த தொடர் பேச்சுக்கு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவர், ‘’லாவகமாக திமுகவையும் அதிமுகவையும் ஒன்றாக இணைத்து, போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் என உருவாக்கி அதிமுக வாக்குகளை கவர நினைக்கிற உங்களை பற்றி புரியாதவர்கள் அல்ல தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும். களத்தில் இன்று அதிமுக வலிமையோடும் ஆட்சி அமைக்கிற பலத்தோடும் இருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று தான் அர்த்தம்.

அரசியல் ஒன்றும் சினிமா போல அல்ல, உங்கள் அட்டகத்தி வேலை எல்லாம் அரசியலில் எடுபடாது.’’



