தன்னுடைய சுய முயற்சியால் கலைத்துறையில் பயணித்து உயர்ந்த இடத்திற்கு வருகின்ற போது, தன் கதாபாத்திரங்களை பொறுத்தவரையிலும் பொதுமக்களுக்கு நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை வழங்கக்கூடிய கதாபாத்திரங்களில்தான் நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். குடித்துவிட்டு கும்மாளம் போடும் பாத்திரங்களில் அவர் நடித்தது கிடையாது. குடிப்பவனை திருத்துகின்ற கதாபாத்திரங்களில்தான் நடித்தார் எம்.ஜி.ஆர். அந்த நடிகர் எங்கே? இந்த நடிகர் எங்கே? 100 பேரை அடிக்கிற மாதிரி ஷோ காட்டுவது, குடித்துவிட்டு ஆடுவது மாதிரி பாட்டு, இந்த மாதிரி ஆள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்னத்த பண்ணப்போறாங்க? மக்களை நேசிக்கின்ற தலைவர்கள் வர வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி வெடித்திருந்தார்.

இதற்கு அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற செங்கோட்டையன், ‘’சினிமா வேறு அரசியல் வேறு. மக்களால் நேசிக்கப்பட்டால் அவர் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’’என்கிறார்.



