விஜய் ரசிகர்களுக்கும் இயக்குநர் பார்த்திபனுக்கும் இடையே WORTH WAR நடக்குது.
“என் விவாகரத்து வழக்கைப் பார்த்து நீங்கள் HURT ஆவது எனக்கு HURT ஆகுது. அதெல்லாம் அவ்வளவு WORTH இல்ல” என்று கடந்த 7.3.2026 அன்று தவெக மகளிர் படை முன்னிலையில் விஜய் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மனைவியை கொச்சைப்படுத்துகிறேன் என்று நினைத்துக் கொண்டு திருமண பந்தத்தையே கொச்சைப் படுத்துகிறாரா விஜய்? என்று பலரும் கொதித்தெழுந்தனர். தவெகவில் இருந்த பெண் நிர்வாகிகளே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து 8.3.2026 அன்று மகளிர் தின வாழ்த்து சொன்ன இயக்குநர் பார்த்திபன், விஜய்யின் பேச்சுக்க்கு சூசகமாய் கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘’It’s WORTH ! Worth & worth! Because women is another EARTH . பூமியை நாம் பூமா தேவி என்றே அழைக்கிறோம். சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை. எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே, சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ ! Happy WOMEN’S DAY !’’ என்று தெரிவித்திருந்தார்.

விஜய் தன் மனைவியை வொர்த் இல்லை என்று சொன்ன நேரத்தில் பார்த்திபன் பெண்களை வொர்த் என்று சொன்னதில் பொங்கி எழுந்தனர் விஜய் ரசிகர்கள். பார்த்திபன் – சீதா விவாகரத்து வழக்கை சொல்லி பார்த்திபனை சீண்டினர். இதற்கு பார்த்திபன் ஆதரவாளர்கள் விஜய் ரசிகர்களை தற்குறி கூட்டம் என்று போட்டு பொளந்து எடுத்து வருகின்றனர்.



