நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார். இந்த கள்ள உறவை கைவிடும்படி எத்தனையோ முறை வலியுறுத்தியும் கூட அவர் திருந்தவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். நடிகையுடனான உறவை கைவிடும்படி சொல்லச் சொன்னதால் பலமுறை துன்புறுத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளானேன். இதனால் அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை விஜய் பதிலளிக்கவே இல்லை. சங்கீதாவின் விவாரத்து கோரு விவகாரத்திற்கு பின்னர் முதன்முறையாக தஞ்சாவூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசும் போது சங்கீதா விவகாரம் குறித்து பேசுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் அது குறித்து வாய்திறக்கவே இல்லை.

அவரை பேசவைக்கும் படியாக கூட்டத்தில் ஒருவர் விஜய் -சங்கீதா இருக்கும் பதாகையை உயர்த்திக்காட்டினார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார் விஜய். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அது குறித்து எதுவும் பேசாமலும் கடந்துவிட்டார் விஜய்.



