சொகுசு பேர்வழி விஜய் பனையூரில் இருந்தபடியே Hologram தொழில்நுட்ப உதவியுடன் 233 வேட்பாளர்களையும் ஆதரித்து நிழல் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
வெயில், காற்று மாசு, ஜன நெருக்கடி, அலைச்சல் இவற்றை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் மரங்கள், மின் கம்பங்கள், வாகனங்கள் மீது தாவி தொண்டர்கள் தரும் தொல்லைகளில் இருந்தும், அதன் மூலமாக வரும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் அனுமதி தர மறுப்பு என்று நொண்டிச்சாக்கு சொல்லி பிரச்சாரப் பயணங்களை தள்ளிப்போட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய் என்று தகவல் பரவி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது பனையூர் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்.
Hologram தொழில்நுட்ப உதவியுடன் விஜய்யை நிழல் பிரச்சாரம் மேற்கொள்ள வைக்கலாம் என்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா.

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதால் அந்த தொகுதியில் தவெக போட்டியிடவில்லை. இதனால் மற்ற 234 தொகுதியிலும் தவிர புதுச்சேரியிலும் இந்த நிழல் பிரச்சாரத்தை விஜய் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த முறையில் ஒரு இடத்தில் தவெக தொண்டர்கள் ஒன்று கூடி நின்றால், அங்கே திரைகள் இல்லாமல் வெட்டவெளியில் பிரம்மாண்டமாக விஜய் தோன்றி பேசுவார். ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் பிரச்சார உரைகளை தயாரித்து ஒலியும் ஒளியும் காட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் ஆதவ் அர்ஜூனா.
வெட்டவெளியில் உள்ள விஜய் ஒலியும் ஒளியும் அருகே சென்று செல்பி எடுக்கிறேன் என்று மின் கம்பங்களிலும் மரங்களிலும் ஏறாமல் இருப்பார்களா என்ன தவெக தொண்டர்கள்? பேசாமல் காலி மைதானங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தப்பிக்கலாம்.



